ஐடி ஊழியர்களே உஷார்.. அடுத்த 2 வருடம் இதுதான் நிலைமை..!

இந்திய ஐடி துறையில் இரண்டு வருடங்களாக அபரிமிதமான லாபம் மற்றும் மனதைக் கவரும் வகையிலான சம்பள உயர்வு எனக் கொண்டாட்டத்தில் இருந்தது ஐடி நிறுவனங்கள்.

டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் பிற இந்திய ஐடி நிறுவனங்கள் தற்போது ஊதியம் உயர்வு அளிப்பதிலும், சர்வதேச சந்தையில் பொருளாதாரம் மந்த நிலைக்குச் செல்லும் நிலையில் இருக்கும் காரணத்தால் ஐடி சேவைக்கான டிமாண்ட் குறைந்த காரணத்தால் லாபத்தைத் தக்க வைக்க வேண்டிய இக்கட்டான நிலையில் இருப்பதால் கடும் எச்சரிக்கையுடன் ஒவ்வொரு அடியையும் வைக்கத் துவங்கியுள்ளது.

இதேவேளையில் ஒரு குட்நியூஸ்-ம் வெளியாகியுள்ளது.

வெலாட்டிலிட்டி இன்டெக்ஸ் (VIX) என்றால் என்ன.. இந்த சமயத்தில் கவனிக்க வேண்டிய அவசியம் என்ன?

ஐடி நிறுவனங்கள்

ஐடி நிறுவனங்கள்

அமெரிக்காவின் பொருளாதார மந்தநிலை இந்திய ஐடி நிறுவனங்களை அவ்வளவு மோசமாக இருக்காது என்று பொருளாதார வல்லனர்கள் தெரிவித்துள்ளனர். சொல்லப்போனால் அமெரிக்கப் பொருளாதார மந்த நிலையால் ஐடி துறையில் இருக்கும் அதிகப்படியான ஊதியச் செலவுகள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப் போன்ற முக்கியமான பிரச்சனைகளைத் தீர்க்கும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.

டிஜிட்டல் மயமாக்கல் திட்டம்

டிஜிட்டல் மயமாக்கல் திட்டம்

கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவிட் தொற்றுநோய் காலத்தில் இந்திய ஐடி நிறுவனங்கள் டிஜிட்டல் மயமாக்கல் நோக்கிய வேகமாக நகரத் துவங்கியது, தற்போதைய சூழ்நிலையில் இது வரமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் பொருளாதார மந்தநிலை காரணமாக டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்கள் இல்லை என்றால் பெரிய அளவிலான வர்த்தக மற்றும் வருவாய் பாதிப்புகளை இந்திய ஐடி நிறுவனங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

80-90% வருமானம்
 

80-90% வருமானம்

டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ போன்ற பெரும் இந்திய ஐடி நிறுவனங்களின் வருவாயில் 80-90% அமெரிக்க மற்றும் ஐரோப்பியச் சந்தைகளை நம்பியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் கிளையிட் செலவுகளைப் பெரிய அளவில் குறைக்கும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் அல்லாத பிற ஐடி சேவை திட்டங்களை வைத்திருந்தால் இந்தப் பொருளாதார மந்த நிலையில் திட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கும்.

சம்பள உயர்வு, அட்ரிஷன் விகிதம்

சம்பள உயர்வு, அட்ரிஷன் விகிதம்

அமெரிக்காவின் பொருளாதார மந்தநிலை இந்திய ஐடி நிறுவனங்களின் லாப அளவுகள் கணிசமாகக் குறைந்தாலும், அதிகப்படியான ஊழியர்கள் டிமாண்ட் குறைந்து சம்பள உயர்வு அளவுகளைப் பழைய நிலைக்குக் கொண்டு செல்ல முடியும். இதனால் ஊழியர்கள் வெளியேற்றமும் குறையும்.

அடுத்த 2 வருடம்

அடுத்த 2 வருடம்

அமெரிக்காவின் பொருளாதார மந்தநிலையால் இந்திய ஐடி நிறுவனங்களுக்குப் பிரச்சனைகளை விட லாபம் தான் அதிகம். 2022 ஆம் நிதியாண்டில் இந்திய ஐடி நிறுவனங்கள் 19 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கும் நிலையில் அடுத்த 2 வருடம் மிதமான வளர்ச்சி மட்டுமே காணும் எனக் கிரிசில் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

US Economy slowdown positive effect on wage costs, attrition; Next 2 yrs Indian IT sector on moderation growth

USA Economy slowdown will be a positive effect on IT employee wage costs and attrition level. For Next 2 yrs Indian IT sector on moderate growth after 19 percent growth on fy22.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.