நாட்டின் பாதுகாப்பை விக்ராந்த் போர் கப்பல் வலுப்படுத்தும்: பிரதமர் மோடி நம்பிக்கை

டெல்லி: நாட்டின் பாதுகாப்பை விக்ராந்த் போர் கப்பல் வலுப்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் இன்று கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் பிரதமர் மோடியால் நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் இதுவரை 20,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மிகப்பெரிய கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகும்.

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில், அதிநவீன தானியங்கி அமசங்களைக் கொண்ட இந்தக் கப்பலை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய பிரதமர்; நாட்டின் பாதுகாப்பை விக்ராந்த் போர் கப்பல் வலுப்படுத்தும். சுயசார்பு இந்தியாவுக்கு விக்ராந்த் கப்பல் சிறந்த உதாரணம் என மோடி தெரிவித்துள்ளார். உள்நாட்டிலேயே தாயாராண விக்ராந்த் போர்க்கப்பல் இந்தியாவின் முன்னேற்றத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது. பாதுகாப்பு முறையில் சுயசார்பு இந்தியாவை உருவாக்க தொடர் முயற்சிகள் நடந்து வருவதாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.

விக்ராந்த் போர்க்கப்பலின் கட்டுமானத்துக்கு பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துகள் என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல். இந்திய கடற்படைகான புதிய கொடியையும் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எஃகு பொருட்களால் ஐஎன்எஸ் விக்ராந்த் உருவாக்கப்பட்டது. வேத காலத்தில் இருந்து நீர்வழி பாதுகாப்பில் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது.

ஐஎன்எஸ் விக்ராந்த் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மிதக்கும் நகரத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தால் 5,000 குடும்பங்களுக்கு ஒளி தர முடியும். இந்த போர்க்கப்பலில் பயன்படுத்தபட்டுள்ள கேபிள்கள் கொச்சி முதல் காசி வரை செல்லும் நீளம் கொண்டது. நமது பொறியாளர்களின் கடின உழைப்பால் இந்தியாவிற்கு கற்பனையாக இருந்த நேனோ தொழில்நுட்பம் தற்போது நனவாகியுள்ளது எனவும் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.