ஜேர்மனியில் 800 விமானங்கள் ரத்து! போராட்டத்தால் பரபரப்பு


ஜேர்மனியில் லுஃப்தான்சா நிறுவனம் நடத்தும் வேலைநிறுத்த போராட்டத்தால் 800 விமானங்கள் ரத்தானதாக தகவல்

இந்த வேலை நிறுத்தத்தால் 1,30,000 பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என தொழிற்சங்கம் அறிவிப்பு

லுஃப்தான்சா விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ஜேர்மனியில் 800 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜேர்மனியில் 5000க்கும் மேற்பட்ட விமானிகளுக்கு இந்த ஆண்டு 5.5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த விமானிகள் சங்கம், ஒருநாள் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தது.

இதுதொடர்பாக லுஃப்தான்சா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஜேர்மனியின் முக்கிய விமான நிலையங்களான பிராங்பேர்ட் மற்றும் முனிச் விமான நிலையங்களுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் 800 விமானங்கள் ரத்து! போராட்டத்தால் பரபரப்பு | Protest Germany800 Flights To Be Cancelled

PC: Nicolas Economou / AP file

அத்துடன் இந்த வேலை நிறுத்தத்தால் 1,30,000 பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஊதியப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 24 மணிநேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றும், இதனால் பயணிகள் மற்றும் சரக்கு சேவைகள் இரண்டும் பாதிக்கும் என Vereinigung Cockpit தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 800 விமானங்கள் ஜேர்மனியில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜேர்மனியில் 800 விமானங்கள் ரத்து! போராட்டத்தால் பரபரப்பு | Protest Germany800 Flights To Be Cancelled

 PC: AP



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.