பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் தயார்: அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: மின் விநியோகம் பாதிக்கப்படாமல் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மின்விநியோகத்தில் எந்த பாதிப்பும் இன்றி சீரான மின் விநியோகத்தை வழங்க ஆய்வுக்கூட்டம் தற்போது நடைபெற்றுள்ளது . 

மழைக்காலத்தை எதிர்கொள்ள அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். அதேபோல் தமிழகத்தில் மழைக்காலம் என்பதால் அவ்வப்போது மின் நிறுத்தம் செய்யப்படும் நிலையில் நேற்று ஒரே நாளில் 143 இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது என்றும் தொடர்ந்து உடனடியாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின்சாரம் தற்போது தடையின்றி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

மேலும் பருவமழை காலத்தை எதிர்கொள்ள 1 லட்சத்து 40 ஆயிரம் மின்கம்பங்களும், 9000 கிமீ மின்கம்பிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ,தொடர்ந்து சீரான முறையில் மின்விநியோகம் செய்ய அனைத்து விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் தமிழகத்தில் மின் தயாரிப்புக்கு தேவையான 10 முதல் 11 நாட்கள் வரையிலான நிலக்கரி கையிருப்பு உள்ளது. 

கடந்த ஆட்சியில் நிலக்கரி காணாமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், துறை ரீதியான அமைக்கப்பட்டிருந்த குழு அதனுடைய அறிக்கை தற்பொழுது சமர்ப்பித்துள்ளது அதில் நிலக்கரி காணாமல் போனது உண்மைதான், அந்த அறிக்கையில் எந்தெந்த காலகட்டத்தில் நிலகிரி காணாமல் போய் உள்ளது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக இந்த ஆய்வறிக்கை விஜிலன்ஸ் இடம் சமர்ப்பிக்க உள்ளோம் எனவும் கூறினார். 

தற்போதைய நிலையில் மத்திய அரசு நிறுவனங்களுக்கு தமிழகம் தொகையில் நிலுவை தொகை இல்லை. 

மின்வாரிய காலிப்பணியிடங்களில் குறிப்பிட்ட பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாகவும் மீதமுள்ள பணியிடங்கள் மின்வாரியத்தின் மூலம் நேரடியாகவே நிரப்பப்படும் எனவும் கூறினார். 

எம்எஸ்எம்இ  தொழில் நிறுவனங்கள் நிலை கட்டணத்தை குறைக்க வேண்டுகோள் விடுத்திருந்தனர் , அவர்களது கோரிக்கையை ஏற்று சிறு நிறுவனங்களுக்கான நிலை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். 

அதேபோல் வடசென்னையில் நேற்று ஒரு பெண் மின்சாரம் தாக்கி சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சம்பவம் நடந்த இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு தான் இருந்தது இருப்பினும் அதிகப்படியான மழை நீர் தேங்கி இருந்த நிலையில் மாநகராட்சியின் சாலை விளக்குகளில் மின்னிறுத்தம் செய்யப்படாததால் மின் கசிவு ஏற்பட்டு இந்த விபத்து நடந்துள்ளது என்றும் வரும் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாநகராட்சி இடமும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.