சொந்த தொகுதியில் வலுவிழந்த ஓபிஎஸ்… போடியில் வீசும் ஈபிஎஸ் அலை..!

ஜூலை 11ம் தேதி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி உத்தரவு அளித்ததை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பை தற்போது வழங்கியதை அடுத்து இன்று தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இபிஎஸ் ஆதரவாளர்கள் போடியில் முக்கிய பகுதிகளான வள்ளுவர் சிலையிலிருந்து தேவர் சிலை வரை ஊர்வலம் ஆக வந்து பட்டாசு வெடித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

அதிமுக மாநில விவசாயிகள் சங்க தலைவர் சேது தலைமையில் நடந்த இந்த ஊர்வலத்தில் ”எடப்பாடியார் வாழ்க” கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடியார் வாழ்க ”சேலத்து சிங்கம்” எடப்பாடியார் வாழ்க என்ற கோஷங்களை எழுப்பினர்.

ஓபிஎஸ்-இன் சொந்த தொகுதியான தேனி மாவட்டம் போடியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தொண்டர்கள் ஊர்வலம் நடத்தி வாழ்த்து தெரிவித்த நிகழ்வு ஓபிஎஸ்-க்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. காலம்காலமாக அதிமுகவில் இருப்பவர்கள் ஓபிஎஸ் – ஈபிஎஸ் பிரச்சினையை விரும்பாமல் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், பொதுக்குழு கூட்டப்பட்ட நாளன்று அதிமுக அலுவலகத்தில் புகுந்து ஆவணங்களை ஓபிஎஸ் எடுத்து சென்றதாக குற்றசாட்டுகள் எழுந்தபோதே அதிமுக ஆதரவாளர்களுக்கு ஓபிஎஸ் மீது அதிருப்தி எழுந்தது. மேலும், திமுகவில் மறைமுகமாக வைத்துள்ள இணக்கம், குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பதவி பெற்று கொடுப்பது, கட்சியை விட பதவிதான் முக்கியம் என்ற நிலைப்பாடு போன்ற விமர்சனங்கள் ஓபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து முழுவதுமாக ஓரம்கட்ட வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளதாக போடி வட்டாரங்கள் கருதுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.