சியான் விக்ரமுக்கு என்னாச்சு..கதாபாத்திரங்கள் தேர்வில் குழப்பம்?

சென்னை: தமிழ் திரை உலகில் மிக நீண்ட போராட்டத்திற்கு பின் சினிமாவில் கால் பதித்தார் நடிகர் விக்ரம் அவரது போராட்டம் மற்றவருக்கு முன் உதாரணமாக அமைந்தது.

தமிழ் திரை உலகில் மிக நீண்ட காலம் அனுபவம் உள்ளவ நடிகர் விக்ரம் சமீபகாலமாக அவருடைய படங்கள் வெற்றி பெற முடியாமல் போகின்றது.

காலத்துக்கேற்ற ட்ரெண்டை பிடித்து விக்ரம் பாத்திரங்களை தேர்வு செய்யவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

10 ஆண்டு போராடி முன்னுக்கு வந்த விக்ரம்

நடிகர் சியான் விக்ரம் 1990-களில் படங்களில் அறிமுகமானாலும் அவர் நடித்த பல படங்கள் பெரிதாக பேசப்படவில்லை. அவரும் பெரிதாக கால் பதிக்க முடியாமல் தடுமாறி வந்தார். மிக்ப்பெரிய போராட்டத்துக்கு இடையே 1999 ஆம் ஆண்டு அவர் நடித்த சேது படம் வெளியாகி அவருக்கு திருப்புமுனையான ஆண்டாக அமைந்தது. சேது படம் மூலம் மீண்டும் விக்ரம் இரண்டாம் வின்னிங் ஆடும் வாய்ப்பை பெற்றார். மிகப்பெரிய எதிர்பார்ப்பு விக்ரம் மீது வந்தது.

வெற்றிக்கொடி நாட்டிய விக்ரம்

வெற்றிக்கொடி நாட்டிய விக்ரம்

அதை தொடர்ந்து ‘தில்’, ‘காசி’, ‘ஜெமினி’, ‘தூள்’, ‘சாமி’, ‘பிதாமகன்’, ‘அருள்’ என பல படங்கள் அவருக்கு பெரிதாக கை கொடுத்தது. இதில் பிதாமகன் அவருக்கு பெரிய அளவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்தது. சாமி படம் போலீஸ் வேடத்தில் அவருடைய வித்தியாசமான நடிப்பை வெளிக்கொண்டு வந்தது. போலீஸ் என்றால் இன்ன நடிகர்கள்தான் சிறப்பாக நடிப்பார்கள் என்கிற வரிசையில் விக்ரமிற்கு சாமி படம் அமைந்தது.

அந்நியன் படத்தின் பிரம்மாண்ட வெற்றி

அந்நியன் படத்தின் பிரம்மாண்ட வெற்றி

அதற்கு அடுத்து விக்ரமை புகழ் ஏணியின் உச்சிக்கு கொண்டுச் சென்ற படம் ஷங்கர் இயக்கத்தில் வெளியான அந்நியன் படம் தான். அதில் அம்பி, அந்நியன், ரேம்போ என 3 பரிணாமங்களில் நடித்தார் விக்ரம். அந்நியன் படத்தில் நாயகனின் மன மாற்றத்தை பிரதிபலிக்கும்போதே உடை மாற்றமும், உருவ மாற்றமும் எப்படி வருகிறது போன்ற புத்திசாலித்தனமாக கேள்வி கேட்காமல் ரசிக்கர்கள் அவர்கள் பாணியில் சொல்வதானால் சினிமாவை சினிமாவாக பார்த்து ரசித்தார்கள். இந்த வரவேற்பு விக்ரமின் வாழ்க்கையை புரட்டிப்போட்டது.

பாராட்டுகள், உற்சாக கொண்டாட்டங்கள் உடன் வராது

பாராட்டுகள், உற்சாக கொண்டாட்டங்கள் உடன் வராது

எந்த நடிகனும் வெற்றிபெறும்போது சுற்றியிருக்கும் புற சூழ்நிலையை யதார்த்தமாக அணுக மறுக்கிறான். வெற்றிபெற்றவர்களை தூக்கி கொண்டாடும் திரையுலகம் என்பதை பத்தாண்டுகள் தோல்வியை மட்டுமே சந்தித்து போராடி வந்த விக்ரம் பார்க்க மறுத்தார். அவரை பாராட்டுவதை வைத்து ஜாக்கிரதையாக அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்வதில் கவனம் காட்டியிருந்தால் இன்று 100 கோடி பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் ஹீரோ விக்ரம் தான். காரணம் ஆண்மையான ஆக்ரோஷ நடிப்பை வெளிப்படுத்தும் ஹீரோக்களுக்கும் எப்போதும் மதிப்பு உண்டு.

எம்ஜிஆரை விடவா ஒரு ஹீரோ உதாரணமாக இருக்க முடியும்

எம்ஜிஆரை விடவா ஒரு ஹீரோ உதாரணமாக இருக்க முடியும்

எம்ஜிஆர், ரஜினி, அஜித், விஜய் என பல உதாரணங்களை சொல்லலாம். ஆனால் அதிலும் எது நமக்கான வேடம் என்பதை தேர்வு செய்து நடிப்பதில்தான் பலரும் வெற்றிப்பெற்றுள்ளனர். காசி, பிதாமகன் போன்ற படங்கள் விக்ரமின் நடிப்புத்திறமையை வெளிக்கொணர்ந்த படங்கள் என்றாலும் விக்ரமிடம் ரசிகர்கள் எதிர்பார்த்தது சார்மிங்காக அதே சமயம் மிதமான ஹீரோயிசம் காட்டும் ரோல்களைத்தான். அதைத்தான் எம்ஜிஆர் செய்தார். என்றும் தன்னை வருத்திக்கொண்டதில்லை. ஒரே நேரத்தில் எம்ஜிஆராகவும், சிவாஜியாகவும் ஒரு நடிகர் ஃபீல்டில் இருக்க முடியாது. அதீத ஹீரோயிசம், வன்முறைக்காட்சிகள் அதிகம் கொண்ட படங்களும் ரசிகர்களுக்கு சலிப்பைத்தான் தரும்.

அந்நியனின் அதீத வரவேற்பும் விக்ரமின் மனமாற்றமும்

அந்நியனின் அதீத வரவேற்பும் விக்ரமின் மனமாற்றமும்

தமிழக மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட ஒரு நடிகர் ஆக்சன் ஹீரோவாக இயங்கிய ஒரு நடிகர், போலீஸ் வேடத்தில் கலக்கிய ஒரு நடிகர், அழகான வசீகரத் தோற்றத்தை கொண்டவர் போன்ற பல பிளஸ் அம்சங்கள் இருந்தாலும் வித்தியாசத்தை தருகிறேன் என்ற பெயரில் வேடங்களில் வித்தியாசத்தை காண்பிப்பது என ஆரம்பித்தார் நடிகர் விக்ரம். அதற்கு முதல் காரணமாக அமைந்தது அந்நியன் படத்தில் கிடைத்த அவருக்கு கிடைத்த அதீத வரவேற்பு காரணமாக வித்தியாசமான வேடங்களை ஏற்று நடித்தால் ரசிகர்கள் தம்மை உச்சத்தில் வைப்பார்கள் என விக்ரம் நினைத்தாரோ என்னவோ அதன் பின்னர் அவருடைய ஒவ்வொரு படத்திலும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று செய்ய ஆரம்பித்தார் இது அவருக்கு பின்னடைவையே தந்தது.

உருவத்தை வித்தியாசப்படுத்துவதால் வெற்றிபெற முடியுமா?

உருவத்தை வித்தியாசப்படுத்துவதால் வெற்றிபெற முடியுமா?

அந்நியன் படத்திற்கு பிறகு மஜா, பீமா, ராவணன், தெய்வத்திருமகள் போன்ற படங்களில் நடித்தார் இதில் தெய்வ திருமகள் படத்தில் மனநலன் குறைபாடு கொண்டவராக நடித்தார். இந்த வேடம் ஆக்சன் ஹீரோ விக்ரம் பொருந்தாததாக ரசிகர்கள் நினைத்தனர். அந்த வேடத்தில் விக்ரமிற்கு திருப்தி இருந்திருக்கலாம். வெளியில் பாராட்டு கிடைத்திருக்கலாம். ஆனால் வணிக ரீதியாக விக்ரமை பார்த்த ரசிகர்கள் இந்த வேடத்தை ஏற்க வில்லை. அதே போன்று ஐ படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறேன் என்று தான் உருவத்தை விகாரப்படுத்திக் கொண்டு நடித்தார். விக்ரமை பொருத்தவரை இது பெரிதாக பேசப்படும் என்று நினைத்தார் ஆனால் ரசிகர்களின் கணிப்பு வேறு விதமாக இருந்தது படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை.

குதிரைப்போன பின் லாயத்தை பூட்டி பயன் என்ன?

குதிரைப்போன பின் லாயத்தை பூட்டி பயன் என்ன?

இதற்கிடையே விக்ரம் போன்று ஆக்ஷனிலும் நடிப்பிலும் கலக்கும் பல நடிகர்கள், இளைஞர்கள் தமிழ் திரையுலகில் கால் பதித்தனர் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் முக்கிய இடங்களை பிடித்தனர். இடையிடையே விக்ரம் சில படங்களை நடித்தார். அதில் ஸ்கெட்ச் படத்தில் கடைசியில் அவர் கொல்லப்படுவார் இது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மீண்டும் சாமி 2 படத்தை நடித்தார். சாமி படம் வெளிவந்த உடனேயே சாமி 2 நடித்து அறுவடை செய்திருந்தால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்திருக்கும். ஆனால் 15 ஆண்டுகள் கழித்து வெளிவந்த சாமி 2 பெரிதாக வரவேற்கப்படவில்லை.

மகான் அதீத வன்முறை ரசிக்கப்படவில்லை

மகான் அதீத வன்முறை ரசிக்கப்படவில்லை

அதன்பிறகு ராஜ்கமல் பிலிம்ஸ் கடாரம் கொண்டான் படத்தில் நடித்தார். இது ஒரு வித்தியாசமான படம் இந்த படமும் பெரிதாக போகவில்லை. அதன் பின்னர் தனது மகனுடன் இணைந்து கடந்த ஆண்டு மகான் படத்தில் நடித்தார். இந்த படம் எதை சொல்ல வருகிறது என்று பட குழுவினருக்கும் தெரியவில்லை, இயக்குனருக்கும் தெரியவில்லை, வேடத்தை ஏற்ற விக்ரமிற்கும் தெரியவில்லை. இது கார்த்திக் சுப்புராஜ் படம் தானா என்று கேள்வி கேட்கும் அளவிற்கு படத்தை எடுத்திருந்தனர். மகான் காந்தி மகான் அவர் சொன்ன சுதந்திரத்தை மது அருந்துவதற்கும், தீய காரியங்களில் ஈடுபடுவதற்கும் ஏற்ற சுதந்திரமாக ஹீரோ கடைசியில் பேசுவது போன்ற காட்சிகள் படம் முழுவதும் நடக்கும் கொலைகள், என்கவுண்டர்கள் ரசிகர்களை படத்தை விட்டு விலக வைத்தது.

ஆர்ப்பாட்டங்கள், இளசுகளின் கைத்தட்டல் வெற்றிப்பெற வைக்காது

ஆர்ப்பாட்டங்கள், இளசுகளின் கைத்தட்டல் வெற்றிப்பெற வைக்காது

அதன் பின்னர் விக்ரம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார் தனக்கேற்ற சரியான வேடத்தை நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். கோப்ரா படம் வித்தியாசமான படமாக இருக்கும் என்று விக்ரம் போகும் இடமெல்லாம் பேசி வந்தார். அந்தப்படத்தில் போட்ட வித்தியாசமான வேடங்களுக்காக தான் மெனக்கிட்டதை கூறினார். அதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்க முடியாது, பட ப்ரொமோஷனில் விக்ரம் மற்றும் புரமோட்டர்களால் பெரிதாக பேசப்பட்டாலும் ரசிகர்களால் பெரிதாக ரசிக்கப்படவில்லை. ஊர் ஊராக போய் படம் பற்றி பேசுவதும் அங்கு குவியும் கல்லூரி மாணவர்கள், இளசுகளின் கைத்தட்டலும் வரவேற்பும் மட்டும் படத்தை வெற்றி பெற செய்யாது என்பதை விக்ரம் தற்போது உணர்ந்திருப்பார்.

ரசிகர்களின் மனநிலை அறியாமல் எடுக்கப்படும் படங்கள்

ரசிகர்களின் மனநிலை அறியாமல் எடுக்கப்படும் படங்கள்

வெற்றிகரமான நடிகர்கள் படங்களில் சரியான வேடங்களை ஏற்பதும் அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்ற சரியான டிரெண்டை பிடிப்பதும், நடிக்கிறேன் என்ற பெயரில் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பிற்கு முரணானதை செய்யாமல் எதார்த்தமான சரியான படங்களில் நடிப்பதும் மிக முக்கியம் என விமர்சகர்கள் சொல்வதை மறுக்க முடியாது. இதை புரிந்துக்கொள்ளாமல் தாங்கள் எடுப்பதுதான் படம், நடிப்பதுதான் நடிப்பு, தாங்கள் எடுப்பதை ரசிகர்களும் ரசிக்க வேண்டும் என்று படம் எடுத்தால் மீண்டும், மீண்டும் படங்கள் ரசிகர்களால் ஏற்கப்படாமல் போகும் என்பதே எதார்த்தமான உண்மை.

2 புகழ்பெற்ற நடிகர்கள் படங்களே விமர்சிக்கப்பட்டது

2 புகழ்பெற்ற நடிகர்கள் படங்களே விமர்சிக்கப்பட்டது

கோப்ரா படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்தாலும் முதல் நாளிலிருந்து வரும் விமர்சனங்கள் படத்திற்கு ஆதரவாக வரவில்லை. டார்க்மோடு, வன்முறைக்காட்சிகள், யதார்த்ததுக்கு புறம்பான காட்சிகளை வைத்து படம் எடுப்பது எப்போதும் வெல்லாது. புகழ்பெற்ற நடிகர்கள் இருவர் நடித்த படம் வசூல் ரீதியாக வென்றாலும் யதார்த்தம் இல்லாததால் சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டதை கண்டோம். இது அவர்களுக்கு உள்ள மாஸ் காரணமாக வசூல் பாதிக்காவிட்டாலும் தொடர்ச்சியாக அப்படி நடித்தால் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்பதற்கான எச்சரிக்கையே.

ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும்

ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும்

திரையுலகில் சுற்றி இருப்பவர்கள் வாழ்த்துவதும், ப்ரமோட்டர்கள் வாழ்த்துவதும், ட்விட்டர் சமூக வலைதளங்களில் கிடைக்கும் வாழ்த்துக்களும், உண்மையான வெற்றி அல்ல. ரசிகர்களின் மனநிலை அறிந்து செயல்படுவது உண்மையான வெற்றி. ட்விட்டரில் சமூக வலைதளங்களில் தூக்கிப்பிடிப்பவர்கள், வாழ்த்துபவர்கள் படம் லேசாக ஓடாவிட்டால் புரட்டிப்போட்டு அப்படியே எதிர்வினை ஆற்றுவார்கள் என்பதை இதற்கு முன் பல உதாரணங்கள் மூலம் சொல்லலாம். ஆகவே தமிழ் திரையுலகின் ஆகச்சிறந்த நடிகர் விக்ரம் தன்னை சுய பரிசோதனை செய்து அவரிடம் ரசிகர்களுக்கு உள்ள எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.