பெங்களூர்: இந்தியாவில் குவிக் காமர்ஸ் சேவை, அதாவது 10 நிமிடங்களில் மளிகைப் பொருட்கள், காய்கறிகள் உட்பட வீட்டுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் ஹோம் டெலிவரி செய்யும் சேவை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்தக் குவிக் காமர்ஸ் சேவை வேகமாக நகரத்து வாழ்க்கையில் தற்போது மக்களின் முக்கியத் தேவையாக மாறியிருக்கும் நிலையில், இத்தகைய 10 நிமிட ஆன்லைன் டெலிவரி தளத்தின் வர்த்தகம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்த நிலையில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தளத்தில் காண்டம் விற்பனை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐடி ஊழியர்களே உஷார்.. அடுத்த 2 வருடம் இதுதான் நிலைமை..!
மும்பை – ஆணுறை
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தளத்தில் இருக்கும் மும்பை வாடிக்கையாளர்கள் கடந்த 12 மாதங்களில் அதிகளவிலான ஆணுறைகளை ஆர்டர் செய்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 570 மடங்கு அதிகமாகக் காண்டம்-களை ஆர்டர் செய்து ஸ்விக்கி நிறுவனத்தையே வியக்க வைத்துள்ளனர்.
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தளத்தில் குவிக் காமர்ஸ் சேவை தளத்தின் வர்த்தகம் கடந்த 12 மாதத்தில் 16 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இத்தளத்தில் அதிகளவில் வாங்கப்பட்ட பொருட்களின் பட்டியலில் இருப்பவை முட்டைகள், ஆணுறைகள், சானிட்டரி நாப்கின்கள் மற்றும் டம்பான்.
முக்கிய வர்த்தக நகரங்கள்
பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், டெல்லி மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் இருப்பவர்கள் தான் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்-ன் சேவை தளத்தின் மிகப்பெரிய வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
distress பொருட்கள்
மும்பை தவிர நகரங்களிலும் சானிட்டரி நாப்கின்கள், மாதவிடாய் கப்-கள், டம்பான்கள் (கடந்த ஆண்டில் ஆர்டர் செய்யப்பட்ட 2 மில்லியன் யூனிட்களின் இணையான அளவு) மற்றும் band-aids (45,000 பெட்டிகள்) உள்ளிட்ட distress பொருட்களை அதிகளவில் ஆர்டர் செய்துள்ளனர்.
ஐஸ்கிரீம்
ஏப்ரல் – ஜூன் கோடை காலத்தில் இந்த முக்கிய நகரங்களில் ஐஸ்கிரீம் ஆர்டர் எண்ணிக்கை 42 சதவீதம் உயர்ந்துள்ளது. இதிலும் 10 மணிக்கு மேல் ஆர்டர் செய்வோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
நூடுல்ஸ், பிரஷ் ஜூஸ், முட்டை, பால்
இதேபோல் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தளத்தில் 56 லட்சம் பாக்கெட் நூடுல்ஸ், ஹைதராபாத்-ல் மட்டும் கோடை காலத்தில் 27000-க்கும் அதிகமான பிரஷ் ஜூஸ் பாட்டில், 5 கோடி முட்டை, 3 கோடி பால் பாக்கெட், 2 லட்சம் பாத்ரூம் சுத்தம் செய்யும் ஆர்டர்கள் குவிந்துள்ளது.
Mumbai people Ordering 570 times more Condoms than other cities says Swiggy Instamart
Mumbai people Ordering 570 times more Condoms than other cities in last 12 months says Swiggy Instamart. distress items were the huge selling items in quick commerce business in india.