தமிழக பாஜக பட்டியலின அணி மாநில பொருளாளர் பிரபல ரவுடி பி.பி.ஜி.டி. சங்கர் கைது

Crime News in Tamil Nadu: திருவள்ளுர் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையிலுள்ள, பெரியபாளையம் ரோடில் ஜோதி (வயது 33) என்பவர் ஜே.பி.ஸ்டோர் ஏஜென்சிஸ் என்ற பெயரில் சிட் பண்ட் ஒன்றை நடத்தி வருகிறார். ஜோதி என்பவருக்கு, சத்தியமூர்த்தி என்பவருக்கும் சுமார் எட்டு கோடியே 25 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வளர்புறம் கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே வளர்புறம் ஊராட்சிமன்ற தலைவரும், தமிழக பாஜக பட்டியலின அணி மாநில பொருளாளரும், பிரபல ரவுடியுமான பி.பி.ஜி.டி சங்கர், இந்த பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் சத்தியமூர்த்தியிடம் பணத்தை கேட்டால், உன்னை கொன்று விடுவேன் என சிட் பண்ட் உரிமையாளர் ஜோதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து இதுக்குறித்து சிட் பண்ட் உரிமையாளர் ஜோதி ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தமிழக பாஜக பட்டியலின அணி மாநில பொருளாளர் பிபி.ஜி.டி.சங்கர் மீது ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய குற்ற எண்:564/2022 u/s : 420,294(b) 506(!!) IPC ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் பி.பி.ஜி.டி சங்கரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பி.பி.ஜி.டி சங்கர் மீது ஸ்ரீபெரும்புதூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் மறைந்த பிரபல ரவுடி பி.பி.ஜி. குமரனின் தம்பியான பி.பி.ஜி.டி. சங்கரின் மீது 15 வழக்குகள் பதியப்பட்டு, மூன்று குற்றப்பத்திரிகையும் தமிழக காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிஜேபி பட்டியல் அணியோட மாநில பொருளாளரை கைது பண்ற அளவுக்கு துணிச்சல் வந்துருச்சா, 5 கொலை தானேய்யா பண்ணிருக்கான் PPGD சங்கர்?  இது என்ன பெரிய குத்தம்? என்னன்னு கேளுங்க ஜி என்றும், உங்களுக்கு உண்மையிலயே தில் இருந்தா அண்ணாமலையை மீறி PPGD சங்கர் மேல குண்டாஸ் போடுங்க பாப்போம் என்றும் சவுக்கு சங்கர் தனது டிவிட்டர் கணக்கில் காவல்துறையை நக்கல் அடிப்பது போல் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.