ஈரோடு மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேரும் ஓதிய விபத்தில் முதியவர் உயிரிழந்துள்ளார். மேலும் இளைஞர் காயமடைந்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் லட்சுமி நகர் ஐ.ஆர்.டி.டி. மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் பச்சியப்பன் (67). இவர் இருசக்கர வாகனத்தில் பவானியில் உள்ள வங்கிக்கு சென்று விட்டு நடராஜபுரம் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த அப்துல் ஹமீது (25) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் பச்சியப்பன் இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பச்சியப்பனை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்தவர் பச்சியப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அப்துல் ஹமீது காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.