இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு 6,168 ஆக சற்று குறைந்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 6 ஆயிரத்து 168 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நேற்று 7 ஆயிரத்து 946 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 6 ஆயிரத்து 168 ஆக குறைந்துள்ளது.
இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடியே 44 இலட்சத்து 36 ஆயிரத்து 339 லிருந்து 4 கோடியே 44 இலட்சத்து 42 ஆயிரத்து 507 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 9 ஆயிரத்து 685 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தனர். இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 38 இலட்சத்து 45 ஆயிரத்து 680 லிருந்து 4 கோடியே 38 இலட்சத்து 55 ஆயிரத்து 365 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 5 இலட்சத்த 27 ஆயிரத்து 932 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 748 லிருந்து 59 ஆயிரத்து 210 ஆக குறைந்துள்ளது.
இதுவரை இந்தியா முழுவதும் 212 கோடியே 72 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒரே நாளில் 22 இலட்சத்து 40 ஆயிரத்து 162 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.