சர்வதேச நாணய நிதியம் (IMF), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் உலக வங்கி ஆகியவற்றில் இருந்து பெறப்படும் டொலர் மற்றும் நிதி அதிகரிப்பால், ஒரு அமெரிக்க டொலரின் கொள்வனவு 300 ரூபாவாக குறைவடையும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நிதி ஒதுக்கீடு (திருத்த) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் சப்ரி இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போது ஒரு அமெரிக்க டொலரின் விலை ரூ. 367. 30.