தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க கேரளா சென்றார் முதலமைச்சர்..

தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா சென்றுள்ளார்.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல குழுவின் கூட்டம் நாளை திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், அக்கூட்டத்தில் பங்கேற்க கேரளா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக பேசுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.