“ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொண்டால், அதிமுகவில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு மீண்டும் இடமுண்டு,” என, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து உள்ளார்.
சென்னையை அடுத்த வானகரத்தில் கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு எதிராக,
மற்றும் வைரமுத்து ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்றும், இடைக்காலப் பொதுச் செயலாளராக,
தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும் தீர்ப்பு அளித்தார். இது, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி, தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
அதில், ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்றும், இடைக்காலப் பொதுச் செயலாளராக, எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு அளித்து, தனி நீதிபதி ஜெயச்சந்திரனின் உத்தரவை ரத்து செய்தனர். இது, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமியை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக் கொண்டால், அதிமுகவில், அவரை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும், வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியில் மீண்டும் சேர்ப்பது குறித்து கட்சித் தலைமை நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முடிவு செய்வார்கள்” என்றும் தெரிவித்தார்.
இதன் மூலம், ஓ.பன்னீர்செல்வத்திற்கு, எடப்பாடி பழனிசாமி தரப்பு நிபந்தனை விதித்துள்ளது. இந்த நிபந்தனையை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில் அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்து செயல்பட முடியும் என, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, மேல் முறையீட்டு தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாட, ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார்.