செப்டம்பர் 16ல் தேசிய சினிமா தினக் கொண்டாட்டம்.. ரசிகர்கள் கொண்டாட இன்னொரு காரணமும் இருக்கு!

சென்னை : வரும் செப்டம்பர் 16ம் தேதி தேசிய சினிமா தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

இந்த சிறப்பான தினத்தில் பல முன்னெடுப்புகளை திரைத்துறையினர் நாடு முழுவதும் செய்யவுள்ளனர்.

இந்திய அளவில் திரையரங்குகளில் கட்டணத்திலும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நீண்ட தூர பயணம்

டெண்ட் கொட்டாயில் படம் பார்த்த காலகட்டம் ஒன்று இருந்தது. அந்தக் காலங்களிலும் படம் பார்ப்பதற்காக ரசிகர்கள் அதிகமாக மெனக்கெடவே செய்தனர். ஏனென்றால் நினைத்த நேரத்தில், நினைத்த இடங்களில் படங்களை பார்க்க முடியாது. ஒரு படத்தை பார்ப்பதற்கு நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது.

தீபாவளி -பொங்கல் படங்கள்

தீபாவளி -பொங்கல் படங்கள்

இதனால் குடும்பத்துடன் படம் பார்ப்பது என்பது கனவாகவே இருந்தது. தொடர்ந்து இந்த நிலை மாறியது. ஆனாலும் தீபாவளி, பொங்கல் ரிலீஸ் படங்களையே பெண்கள் பார்க்க முடிந்தது. இந்நிலையில் தற்போது அதிகமான திரையரங்குகள் மல்டி பிளக்ஸ்களில் படங்களை நாம் பார்க்க முடியும்.

மாயாஜால பயணம்

மாயாஜால பயணம்

அதிகமான ஏசி, பிரம்மாண்டமான திரை என்று இரண்டரை மணிநேரம் நாம் மாயாஜாலத்தில் பயணம் செய்யும் வகையில் இத்தகைய திரையரங்குகளில் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அதற்கு நாம் கொடுக்கும் விலை அதிகம். குறைந்தது 4 பேர் கொண்ட குடும்பம் ஒரு படத்தை பார்க்க ரூ 2000 செலவழிக்க வேண்டியுள்ளது.

குறைந்தபட்சம் ரூ.1000 செலவு

குறைந்தபட்சம் ரூ.1000 செலவு

நார்மலான திரையரங்குகள் என்றாலும் அங்கும் குறைந்தபட்சம் 1000 ரூபாயாவது செலவழிக்க வேண்டியுள்ளது. டிக்கெட் விலை, வாகன நிறுத்தக் கட்டணம், திரையரங்குகளில் விற்கப்படும் உணவு என அனைத்திற்கும் செலவழிக்க வேண்டியுள்ளது. இதையொட்டி பிரம்மாண்டமான படங்களுக்கு மட்டுமே ரசிகர்கள் திரையரங்குகளில் சென்று ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

தேசிய சினிமா தினம்

தேசிய சினிமா தினம்

இதற்கான மாற்றுத் தளமாக, வரப்பிரசாதமாக அமைந்துள்ளது ஓடிடி தளங்கள். இந்நிலையில் வரும் செப்டம்பர் 16ம் தேதி நாடு முழுவதும் தேசிய சினிமா தினம் கொண்டாடப் படவுள்ளது. இதையொட்டி அன்றைய தினம் மட்டும் நாடு முழுவதும் உள்ள 4000 திரையரங்குகளில் ரூ 75 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னணி திரையரங்குகள் பங்கேற்பு

முன்னணி திரையரங்குகள் பங்கேற்பு

இந்த முன்னெடுப்பில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளும் பங்கேற்கவுள்ளன. பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ் போன்ற பல்வேறு அரங்குகளில் இதில் பங்கேற்கவுள்ளன.இந்தத் தருணத்தை பயன்படுத்தி நடுத்தரக் குடும்பத்தினரும் மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் சென்று தங்களது குடும்பத்தினரோடு படம் பார்த்துக் கொள்ளலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.