தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் பணம் சம்பாதிப்பதற்கு பல்வேறு எளிய வழிகள் கிடைத்துள்ளன என்பது தெரிந்ததே. அந்த வகையில் மிகவும் எளிய வழியில் பணம் சம்பாதிக்கும் ஒரு தளமாக யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோ உள்ளது.
யூடியூப் வீடியோவை பதிவு செய்து அதில் மாதம் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் நபர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் யூடியூப் ஷார்ட்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
ஐடி ஊழியர்களுக்கு எதிராக ஒன்று சேரும் டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ், ஹெச்சிஎல்..!
யூடியூப் ஷார்ட்ஸ்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட யூடியூப் ஷார்ட்ஸ் மிகக் குறுகிய காலத்தில் ஏராளமான மக்கள் மனதில் இடம் பெற்று விட்டது என்பதும் யூடியூப் போலவே யூடியூப் ஷார்ட்ஸும் தற்போது பிரபலமடைந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
யூடியூப் பார்வையாளர்கள்
ஒவ்வொரு நாளும் யூடியூப் ஷார்ட்ஸ் தளத்தில் பதிவு செய்யப்படும் வீடியோக்கள் சுமார் 30 மில்லியன் பார்வையாளர்களை பெறுவதாகவும் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த பார்வையாளர்களை விட 400% அதிகம் என்றும் கூறப்படுகிறது.
படைப்பாளிகள்
அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் யூடியூப் ஷார்ட்ஸ் தளத்தை பயன்படுத்தும் படைப்பாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. உலகெங்கும் உள்ள படைப்பாளிகள் யூடியூப் ஷார்ட்ஸ் மூலம் தங்களுக்கு பிடித்த படைப்புகளை வீடியோவாக பதிவு செய்து அதன் மூலம் லைக்ஸ், கமெண்ட்ஸ்களை பெற்று வருகின்றனர்.
ஒரிஜினல் படைப்பு
குறுகிய, ஒரு சில நொடிகள் மட்டுமே இருக்கும் இந்த வீடியோ படைப்பாளிகளின் ஒரிஜினல் படைப்பாக இருந்தால் அவை மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்று குறிப்பிட்டது.
வீடியோ உருவாக்குவது எப்படி?
ஒரு சிறிய வீடியோவை உருவாக்குவது என்பது ஒரு சில நிமிடங்களில் செய்யும் வேலை என்பதும் அதனால் அந்த படைப்பாளிக்கு ஏராளமான பயன்கள் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மொபைல் மூலமே யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோவை உருவாக்கலாம் என்பதும், உங்களுக்கு பிடித்த காட்சிகள் அல்லது நிகழ்வுகள் நடக்கும் போது அல்லது எதிர்பாராத ஒரு நிகழ்வு நடக்கும்போது உடனே உங்கள் மொபைல் கேமராவை ஆன் செய்து ஒரு வீடியோவை உருவாக்கி அதனை யூடியூப் ஷார்ட்ஸ் தளத்தில் பதிவேற்றலாம்.
வருமானம்
யூடியூப் ஷார்ட்ஸ் தளத்தில் 60 வகையான பிரிவுகள் உள்ளன என்பதும் அதில் எந்த வகையான பிரிவுகளிலும் வீடியோக்களையும் நீங்கள் படம் எடுத்து பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு படைப்பாளியும் ஆக்கபூர்வமாக, தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தி யூடியூப் ஷார்ட்ஸ் மூலம் புகழ் பெறுவது மட்டுமின்றி தங்களுடைய வீடியோக்கள் மூலம் வருமானத்தையும் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம்
மொபைல்போன் படைப்பாளிகள் யூடியூப் ஷார்ட்ஸ் தளத்தில் வீடியோ பதிவு செய்வதால் யூடியூப் நிறுவனம் இதற்காக படைப்பாளிகளுக்கு வெகுமதியும் தருகிறது. இது பொழுதுபோக்காக மட்டுமின்றி வருமானம் தரும் ஒரு வணிகமாகவும் இளைஞர்களுக்கு ஒரு தளத்தை உருவாக்கி கொடுத்துள்ளது.
110 மில்லியன் டாலர்
யூடியூப் நிறுவனம் சுமார் 110 மில்லியன் டாலர் நிதியை படைப்பாளிகளுக்கு வெகுமதி அளிப்பதற்காக ஒதுக்கியுள்ளது. ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான புதிய படைப்பாளிகள் யூடியூப் ஷார்ட்ஸ் தளத்தில் நுழைந்து அதில் வருமானம் பெறும் தகுதி உடையவர்களாக மாறி வருகின்றனர். படைப்பாளிகள் ஒவ்வொருவரும் தங்களுடைய திறமைக்கு ஏற்ப, தங்களது படைப்புக்கு ஏற்ப, 100 டாலர் முதல் 10,000 டாலர் வரை இதில் சம்பாதித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனித்துவமான வீடியோ
தனித்துவமான அதேநேரத்தில் பார்வையாளர்களை கவரும் வகையில் மகிழ்விக்கும் வகையான வீடியோக்களை யூடியூப் ஷார்ட்ஸ் மூலம் பதிவு செய்யும் படைப்பாளி வருமானம் பெற தகுதியானவர் ஆகிறார். கடந்த ஆண்டில் 40 சதவீத படைப்பாளிகள் யூடியூப் ஷார்ட்ஸ் தளத்தில் புதிய படைப்பாளராகி பணம் சம்பாதித்து உள்ளனர்.
தகுதி
யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோவில் வருமானம் பெறுவதற்கு 180 நாட்களில் குறைந்தபட்சம் ஒரு வீடியோவாக தகுதி பெற்றிருக்க வேண்டும் என்றும் அவ்வாறு தகுதி பெற்றால் அவர்கள் வருமானம் பெற தகுதியானவர்களாக யூடியூப் தேர்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. யூடியூப் நிறுவனத்தின் வழிகாட்டுதல்கள், பதிப்புரிமை விதிகள் ஆகியவற்றை பின்பற்றினால் யூடியூப் ஷார்ட்ஸ் தளம் அள்ளி அள்ளி பணத்தை கொட்டி கொடுக்கும் ஒரு தளமாக மாறும்.
ரஷ்யாவுக்கு நாங்க இருக்கோம்.. சீனா-வை ஓரம்கட்டிய இந்தியா..!
How to earn money while making YouTube Shorts: THIS is what you need to do
How to earn money while making YouTube Shorts: THIS is what you need to do | அள்ளி அள்ளி பணத்தை கொடுக்கும் யூடியூப் ஷார்ட்ஸ்.. நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!