பாஜகவில் புயல் கிளப்பும் முதல்வர்?; அமித் ஷாவை சந்தித்து பேச ப்ளான்!

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் & நிகோபார் தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கி தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டின்போது தென்மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் தங்களது மாநிலத்தின் அத்தியாவசிய திட்டங்கள், தேவைகள், பிரதான பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்து அதற்கான தீர்வினை பெறுவார்கள்.

இந்த மாநாட்டில் முதலமைச்சர்கள் மட்டும் அல்லாமல் தென்மாநிலங்களை சேர்ந்த அரசுத்துறை உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை முன்வைப்பார்கள்.

அதேபோன்று மாநிலங்களின் சட்டம் – ஒழுங்கு நிலைமை, கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில எல்லை விவகாரங்கள், பெண்கள் பாதுகாப்பு, மாநிலங்கள் இடையேயான நதிநீர் பங்கீடு ஆகிய அம்சங்கள் குறித்தும் இந்த மாநாட்டில் பேசப்படும்.

கடந்த ஆண்டு மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆந்திரா மாநிலம் திருப்பதியில் நடந்த இந்த மாநாட்டில் தமிழக முதல்வர்

கலந்துகொள்ளாமல் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை அனுப்பி வைத்து இருந்தார்.

மத்திய அமைச்சர் தலைமையில் நடந்த மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொண்டு, மாநிலத்துக்கு தேவையான உரிமைகளை கேட்டு பெறுவதை விட்டுவிட்டு அமைச்சரை அனுப்பி வைத்தது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்நிலையில் இத்தகைய சிறப்பு வாய்ந்த தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை நடைபெற இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் மாநாட்டில் இந்த ஆண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

இந்த மாநாட்டுக்கு பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த சந்திப்பின்போது, குஜராத்தில் உள்ள துறைமுகத்தை தனியார் மயமாக்கிவிட்டதால், வெளிநாடுகளில் இருந்து போதை பொருள் கடத்தி வரப்படுவதாகவும், அங்கிருந்து எளிதில் தமிழகத்துக்குள் நுழைவது குறித்தும், தமிழக பாஜக-திமுக லடாய் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் புகார் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சரிடம் பாஜக ஆளும் மாநிலத்தில் நிகழும் குற்றச்சம்பவங்கள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் புகார் அளிக்க உள்ளதாக கூறப்படும் தகவல், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.