டிவிட்டரில் எடிட் பட்டன் 30ஆம் தேதிக்குள் அறிமுகம்.. ஆனா ‘இவர்’களுக்கு மட்டும் தான்..!

டிவிட்டர் மற்றும் எலான் மஸ்க் மத்தியில் பெரும் போராட்டம் நடந்துக் கொண்டு இருக்கும் வேளையில் பராக் அகர்வால் தலைமையில் தொடர்ந்து பல முக்கிய மாற்றங்களை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

என்னதான் எலான் மஸ்க் மீது டிவிட்டர் ஊழியர்களுக்கு கோபம், வெறுப்பு இருந்தாலும், எலான் மஸ்க் கூறிய முக்கியமான மாற்றத்தை டிவிட்டர் நிர்வாகம் ஏற்றுக்கொண்டு நடைமுறைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது.

பெரும்பாலான சமுக வலைத்தளத்தில் EDIT சேவையை டிவிட்டரில் இந்த மாத இறுதிக்குள் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

விமானிகளின் அதிரடி முடிவு.. 800 விமானங்களை ரத்து செய்த லுப்தான்சா.. ஏன்?

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வந்த போது, தான் டிவிட்டரை வாங்கினால் முதலில் எடிட் பட்டனை அனைத்து பதிவுகளுக்கு கொண்டு வருவேன் என தெரிவித்தார்.

டிவிட்டர்

டிவிட்டர்

தற்போது டிவிட்டர் நிறுவனத்தை வாங்க முடியாது என எலான் மஸ்க் அறிவித்தாலும், மஸ்க் கூறிய ஐடியாவை டிவிட்டர் செயல்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகளை பல மாதங்களாக செய்து வருகிறது.

எடிட் பட்டன்

எடிட் பட்டன்

டிவிட்டர் இப்புதிய சேவைக்காக கடந்த 4 மாதங்களாக பணியாற்றி வருவதாகும், சில சந்தைகளில் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களை தேர்வு செய்து எடிட் பட்டனை சோதனை செய்து வருவதாகவும் உறுதி அளித்துள்ளது.

டிவிட்டர் பதிவு
 

டிவிட்டர் பதிவு

இதற்கிடையில் டிவிட்டர் தனது அதிகாரப்பூர்வ கணக்கில் நீங்கள் யாரவது எடிட் பட்டனை பார்த்தால், இது புதிய சேவை பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம், இதனால் உங்கள் கணக்கிற்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்று தெரிவித்துள்ளது.

டிவிட்டர் ப்ளூ யூசர்

டிவிட்டர் ப்ளூ யூசர்

இந்த எடிட் பட்டன் மூலம் நீங்கள் தவறாக செய்த பதிவை திருத்திக்கொள்ள முடியும். மேலும் இந்த புதிய சேவை டிவிட்டரின் ப்ளூ யூசர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது. ப்ளூ யூசர் என்பது கட்டணம் செலுத்தி பிரத்தியேக சேவைகளை வாங்கும் டிவிட்டர் வாடிக்கையாளர்கள். பிற வாடிக்கையாளர்களுக்கு பின்னாளில் வழங்கப்படும்.

ஐடி ஊழியர்களுக்கு எதிராக ஒன்று சேரும் டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ், ஹெச்சிஎல்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Twitter testing the edit button, will launch by end of september

Twitter testing the edit button, will launch by end of september டிவிட்டரில் எடிட் பட்டன் 30ஆம் தேதிக்குள் அறிமுகம்.. ஆனா ‘இவர்’களுக்கு மட்டும் தான்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.