மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மாயமான மயில் சிலையின் அலகில் இருந்தது மலரா, பாம்பா என்பதை கண்டறிந்து முடிவு சொல்ல குழு ஒன்றை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாப்பூர் புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலையின் அலகில் மலர் இருந்ததாகவும், 2014ம் ஆண்டு குடமுழுக்கின் போது, அச்சிலை மாற்றப்பட்டு அலகில் பாம்பு உள்ள மயில் சிலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அது ஆகம விதிகளுக்கு முரணானது என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, அர்ச்சகர் நியமனம் தொடர்பான வழக்கில் கோவில்களின் ஆகமம் குறித்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார். அந்த குழு மயில் சிலையின் அலகில் இருந்தது மலரா? பாம்பா? என்பதை கண்டறிந்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் அலகில் மலர் இருந்தது என முடிவுக்கு வந்தால், ஆகம விதிகளின்படி சிலையை மாற்றியமைக்க வேண்டும் எனவும், பாம்பு தான் இருந்தது என்றால் சிலையை மாற்ற வேண்டிய அவசியமில்லை எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM