இந்தியா விக்ஸ் (VIX) அல்லது வேலாட்டாலிட்டி இன்டெக்ஸ் என்பது சந்தையில் நிலவும் நிலையற்ற நிலைமை குறித்தான குறியீடாகும். இது என் எஸ் இ- ஆல் கணக்கிடப்படும் ஒரு குறியீடாகும். இது கடந்த 2003ம் ஆண்டில் என் எஸ் இ- ஆல் அறிமுகப்படுத்தப்பட்டது.
நீங்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்ய நினைக்கிறீர்கள் அல்லது முதலீடு செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றாலும், நீங்கள் கவனிக்க வேண்டிய குறியீடுகளில் ஒன்று இந்த VIX.
குறிப்பாக ஆப்சன் டிரேடர்கள் பார்க்கும் குறியீடுகளில் இதுவும் ஒன்றாக உள்ளது.
10% ஊழியர்களை குறைக்கும் முன்னணி நிறுவனம்.. கண்ணீரில் ஊழியர்கள்!
விஐஎக்ஸ் எதற்கு?
பொதுவாக பங்கு சந்தை என்றாலே அதில் ஏற்ற இறக்கம் என்பது இருப்பது தான். அதனை முன் கூட்டியே சரியாக மதிப்பீடு செய்வது என்பது கடினமான காரியம். இது பங்கு சந்தையில் பல வருடங்களாகவே வர்த்தகம் செய்பவர்கள் கூட கணிப்பது மிக கடினமான ஒன்றாக உள்ளது. அந்த மாதிரியான சமயத்தில் டிரேடர்கள் இந்த விஐஎக்ஸ்- ஐ கவனித்து முடிவெடிப்பது உண்டு.
இப்போது பயன்படுத்தலாமா?
ஏனெனில் இது கடந்த காலத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாக கொண்ட ஒரு குறியீடாக இருந்தாலும், நிகழ்காலத்தில் பங்கு சந்தையில் நிலவக்கூடிய சவால்களையும் கண்டுகொள்ள பயனுள்ளதாக இருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே இந்திய சந்தையில் சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் ஏற்ற இறக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வர்த்தகர்கள் இந்த சமயத்தில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்திலேயே உள்ளனர். ஆக இந்த சமயத்தில் விஐஎக்ஸ் சரியான குறிக்காட்டியாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
கொரோனா காலத்தில் என்ன நிலை?
இந்த சார்ட் பேட்டர்னில் கடந்த மார்ச் 2020ல் பல மடங்கு உச்சத்தினை எட்டியுள்ளது. இது கொரோனா பரவத் தொடங்கிய சமயம் எனலாம். அந்த காலக்கட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த நாடு தழுவிய லாக்டவுன் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பங்கு சந்தையில் பலத்த சரிவு ஏற்பட்டது. அதன் பிறகு பல மாதத்திற்கு பிறகே சந்தையானது இயல்பு நிலைக்கு திரும்பியது. அந்த சமயத்தில் தான் இந்த இன்டெக்ஸ் ஆனது 20% கீழாக சரிவினைக் கண்டது.
எவ்வளவு இருக்கணும்?
சாதாரணமாக VIX மதிப்பு 13 – 19 என்ற லெவல் இயல்பானதாக கருதப்படுகிறது. இந்த லெவலில் VIX இருந்தால் சந்தையில் ஏற்ற இறக்கம் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதே இந்த VIX இன்டெக்ஸ் ஆனது 20 அல்லது அதற்கு மேலாக இருந்தால், சந்தையில் இயல்பை விட ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும் எனலாம். இந்த இன்டெக்ஸ் ஆனது 35% மேலாக இருக்கும்போது அதிகளவிலான ஏற்ற இறக்கம் என்று கூறப்படுகின்றது. தற்போது 25% மேலாக இருந்து வருகின்றது.
சந்தையின் போக்கு எப்படி இருக்கும்?
பொதுவான இந்த வி ஐ எக்ஸ் -ஐ வைத்துக் கொண்டு அடுத்த 30 நாட்களுக்கு சந்தையின் போக்கினை தெரிந்து கொள்ளலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதனை வைத்து நிஃப்டியின் போக்கினையும் தெரிந்து கொள்ளலாம் என்று கூறுகின்றனர்.
உதாரணத்திற்கு VIX மதிப்பீடானது 20% இருக்கிறது எனில், நிஃப்டியில் 20% ஏற்றமோ அல்லது இறக்கமோ இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் வருடாந்த லெவலையும் இதேபோல தெரிந்து கொள்ள முடியும்.
உதாரணம்
உதாரணத்திற்கு தற்போது நிஃப்டி 17,500 என்ற லெவலில் உள்ளது என வைத்துக் கொள்வோம். VIX குறியீடானது 20 ஆக உள்ளது. ஆக அடுத்த 12 மாதங்களுக்கு நிஃப்டி 14000 முதல் 21000 வரையில் இருக்கலாம்.
இதே அடுத்த 30 நாட்களில் நிஃப்டியின் போக்கு 16,490 – 18,510 என்ற லெவலில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இனி சென்னையில் இருந்து பெங்களூரு ஓட்டலில் உணவு வாங்கலாம்.. ஜோமேட்டோவின் புதிய அறிவிப்பு!
what is India volatility index or VIX? why it is important now?
what is India volatility index or VIX? why it is important now?/வெலாட்டிலிட்டி இன்டெக்ஸ் (VIX) என்றால் என்ன.. இந்த சமயத்தில் கவனிக்க வேண்டிய அவசியம் என்ன?