புதுடெல்லி: சிபிஐயின் துணை சட்ட ஆலோசகர் அவரது தெற்கு டெல்லி இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மத்தியப் புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) லோதி சாலை அலுவலகத்தில் துணைச் சட்ட ஆலோசகராக ஜிதேந்திர குமார் (48) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் தெற்கு டெல்லியின் ஹட்கோ பிளேஸில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை 6.45 மணியளவில் டிஃபென்ஸ் காலனி காவல் நிலையத்துக்கு வந்த தகவலையடுத்து, போலீசார் ஜிதேந்திர குமாரின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அதிர்ச்சியடைந்த போலீசார், அவரது சடலத்தை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.