வழக்கத்தை விட வெப்பமான கோடையில் கோழிகள் குறைவாகவே முட்டை இடுகின்றன
சீனாவின் பல முக்கிய நகரங்கள் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வெப்பமான நாட்களை பதிவு செய்துள்ளன
கொளுத்தும் வெயில் காரணமாக சீனாவில் முட்டை விலையில் கடும் ஏற்றம் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கத்தை விட வெப்பமான கோடையில் கோழிகள் குறைவாகவே முட்டை இடுகின்றன என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காலநிலை மாற்றம் காரணமாக தீவிர வானிலை அடிக்கடி மாறிவருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வெப்பநிலை அதிகரிக்கும் போது உலகெங்கிலும் உள்ள பொருளாதாம் மற்றும் சமூக சூழல்கள் பாதிக்கும் என்றே தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், சீனாவின் பல முக்கிய நகரங்கள் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வெப்பமான நாட்களை பதிவு செய்துள்ளன, மேலும் நாட்டின் தேசிய கண்காணிப்பு அமைப்பானது திங்கள்கிழமை சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டது.
கொளுத்தும் வெப்பமானது மனிதர்களை மட்டுமின்றி விலங்குகளையும் அழுத்தத்தில் தள்ளியுள்ளது.
Hefei நகரில், வெப்பம் காரணமாக முட்டை உற்பத்தி குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி குறிப்பிட்ட பகுதிகளில் அமைந்துள்ள பண்ணைகளில் குளிரூட்டும் அமைப்புகளையும் விவசாயிகள் நிறுவியுள்ளனர்.
இந்த நிலையில், பல மாகாணங்களில் வரத்து குறைந்துள்ளதால் முட்டை விலை உயர்ந்துள்ளது.
Hefei நகரில் மட்டும் முட்டை விலையில் 30% அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. Hangzhou மற்றும் Hai’an நகரங்களிலும் முட்டை விலை உச்சம் தொட்டுள்ளது.
Hefei நகரில் இதுவரை தொடர்ந்து 14 நாட்கள் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவு செய்துள்ளது.
தீவிர வெப்பநிலை நீடித்த காரணத்தால், முட்டை மற்றும் பால் உள்ளிட்ட உற்பத்தியில் இழப்பை அதிகரிக்கச் செய்யும் என நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.