487 மரங்களை அகற்றி டெல்லியில் பிரதமர் மோடிக்கு புதிய வீடு: சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி

புதுடெல்லி: டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம், தலைமைச் செயலகம் மற்றும் புதிய பிரதமர் இல்லம், அலுவலகம் உள்ளிட்ட பல கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில், புதிய பிரதமர் அலுவலகத்திற்கு ரூ.1,381 கோடியில் வீடு, அலுவலகங்களுக்காக 5 கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி, டெல்லி வனத்துறையிடம் ஒன்றிய பொதுப்பணித் துறை விண்ணப்பித்தது. அதில், பிரதமர் அலுவலகம், வீடு கட்டும் இடத்தில் 807 மரங்கள் இருப்பதாகவும், அவற்றில் 487 மரங்கள் இடமாற்றம் செய்வதாகவும், 320 மரங்களை தக்க வைப்பதாகவும் திட்ட அறிக்கை தந்திருந்தது. இதைத் தொடர்ந்து, டெல்லி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், புதிய பிரதமர் அலுவலகம் கட்ட அனுமதி தந்துள்ளது. இக்கட்டிடத்திற்காக அங்குள்ள 60 சதவீத மரங்கள் வெட்டப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.