தங்க நகைக் கடன் போலக் குறைந்த வட்டி விகிதத்தில் இப்படியும் கடன் வாங்கலாம் தெரியுமா?

வேகமாக ஓடிக்கொண்டு இருக்கும் இந்த உலகில் எப்போது அவசரத் தேவைக்குப் பணம் வேண்டும் என்பது தெரிவதில்லை.

அவசரத் தேவைக்குப் பணத்தைச் சேமித்து வைக்கும் பழக்கமும் பெரும்பாலான இந்தியர்களிடம் இல்லை.

எனவே அவசர பணத்தேவை என்றால் இந்தியர்கள் முதலில் நாட்டுவது தங்க நகைக் கடன். தங்க நகை போன்றே குறைந்த வட்டி விகிதத்தில் ஆயுள் காப்பீடுத் திட்டங்கள் மூலமாகவும் கடன் பெறலாம்.

எப்படி?

பெரும்பலன் காப்பீடு நிறுவனங்கள் தங்களது பாலிசிதாரர்கள் 3 அல்லது 5 ஆண்டுகள் வரை தொடர்ந்து ப்ரீமியம் செலுத்திய பிறகு அவசரத் தேவைகளுக்குக் கடன் வழங்குகின்றன. அப்படி இல்லை என்றால் ஆயுள் காப்பீடு திட்டத்தின் பத்திரங்களை வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் சமர்ப்பித்து அதன் மூலமாகவும் கடன் பெறலாம் எனக் கூறுகின்றனர்.

வட்டி விகிதம் எவ்வளவு?

வட்டி விகிதம் எவ்வளவு?

ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு எதிராகக் கடன் பெறும் போது அது நீங்கள் வாங்கும் கடனை செலுத்த இருக்கும் கால அளவை பொருத்தது. நீங்கள் நீண்ட காலத் தவணையில் கடன் பெறும் போது வட்டி விகிதம் குறைவாக இருக்கும். குறைந்தது இந்த வட்டி விகிதம் 10 முதல் 12 சதவீதம் வரை இருக்கும். தனிநபர் கடன் திட்டங்களை விட இந்த காப்பீடு திட்டங்களின் வட்டி விகிதம் குறைவாகத் தான் இருக்கும் எனக் கூறுகின்றனர்.

 கடனை செலுத்துவது எப்படி?
 

கடனை செலுத்துவது எப்படி?

ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு எதிராகக் கடன் பெற்ற பிறகு அதனை பிரீமியம் தொகையுடன் சேர்த்து செலுத்தி அடைக்கலாம். ஆனால் கடன் பெற்றக் கால்லெடுவில் சரியாக அதனைச் செலுத்த வேண்டும். இல்லை என்றால் நீங்கச் செலுத்திய ப்ரீமியம் தொகையிலிருந்து பணத்தைப் பிடித்துக்கொண்டு மீத ப்ரீமியம் தொகையை இன்சூரன்ஸ்ன் நிறுவனம் திருப்பி வழங்கி விடும்.

தேவையான ஆவணங்கள் என்னென்ன?

தேவையான ஆவணங்கள் என்னென்ன?

ஆயுள் காப்பீடு திட்டங்கள் எதிராகக் கடன் பெற வேண்டும் என்றால் அதற்கு முதலில் உங்களது காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்புகொள்ள வேண்டும். கடன் பெறும் போது உங்கள் பாலிசியின் விவரங்கள், ஆதார நகல், வங்கி காசோலை போன்றவை தேவைப்படும். நீங்கள் வழங்கும் வங்கி காசோலையின் கணக்கில் கடன் தொகை செலுத்தப்படும்.

பிக்சட் டெபாசிட் கடன்

பிக்சட் டெபாசிட் கடன்

இதே போன்று வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மூலம் பணம் சேமித்து வந்தாலும், அதை நீங்கள் இடையில் உடைக்க விரும்பாவிட்டால், அதன் மூலமாகவும் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் சேவைகளை வங்கிகள் வழங்குகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How To Take Loan Against Life Insurance Policy?

How To Take Loan Against Life Insurance Policy? How To Take Loan Against Life Insurance Policy? | தங்க நகைக் கடன் போலக் குறைந்த வட்டி விகிதத்தில் இப்படியும் கடன் வாங்கலாம் தெரியுமா?

Story first published: Saturday, September 3, 2022, 8:32 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.