பிரித்தானியாவில் இருந்து பேசுவதாக கூறி அரசு அதிகாரியை ஏமாற்றிய பெண்.
பெரியளவில் நடந்த பண மோசடி அம்பலம்.
நைஜீரியாவை சேர்ந்த ஆணும், அவரின் மனைவியான இந்திய பெண்ணும் சேர்ந்து நபர் ஒருவரை பெரியளவில் பணம் மோசடி செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தியாவில் வசிக்கும் நபர் ஒருவர் அரசு அதிகாரியாக உள்ளார்.
இவரிடம் சில மாதத்திற்கு முன்னர் பேஸ்புக் மூலம் பெண்ணொருவர் நட்பானார்.
தான் பிரித்தானியாவின் லண்டனில் இருப்பதாக அவர் கூறிய நிலையில் வாட்ஸ் அப் மூலம் இருவரும் அடிக்கடி தகவல் பறிமாறி கொண்டனர்.
ஒரு கட்டத்தில் அந்த பெண் தங்க பிஸ்கட்கள், ரோலக்ஸ் வாட்ச் மற்றும் ஐ-போன் அடங்கிய பெரும் மதிப்புள்ள பொருட்களை பரிசாக அனுப்பியதாக அரசு அதிகாரியிடம் தெரிவித்தார்.
அதன்பின்னர் அதிகாரிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, அதில் பேசிய நபர் தன்னை சுங்க அதிகாரி என்று அடையாளப்படுத்தி கொண்டார்.
மேலும் லண்டனில் இருந்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அதிகாரி பெயரில் அதிக மதிப்புள்ள பரிசுகள் வந்துள்ளதாகக் கூறினார்.
vanguardngr
பரிசைப் பெற அவர் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.
இதையடுத்து கோடிகளில் விலைகள் கொண்ட பரிசுகள் கிடைக்க போகிறதே என நம்பிய அதிகாரி மூன்று தவணைகளில் N15,838 மில்லியன் (இலங்கை மதிப்பில் ரூ. 1,34,68,950.47) கட்டணமாக செலுத்தினார்.
இதன்பிறகு பரிசு பொருட்கள் வராததையடுத்தே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சைபர் கிரைமில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்திய நிலையில் தற்போது டெல்லி பகுதியில் இருந்து Samson Emeke Alika என்ற நைஜீரியரையும், அவர் மனைவியான Suchim Tikhir என்ற இந்திய பெண்ணையும் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து 2 லேப்டாப், கார், இரண்டு செல்லாத பாஸ்போர்ட், தங்க சங்கிலிகள், ஏழு செல்போன்கள் உள்ளிட்டவற்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் ஒருவரும் இந்த மோசடி சம்பவத்தில் கைதாகியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்வதற்கான விசாரணை இன்னும் தொடர்கிறது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
vanguardngr