’வருடத்திற்கு ஒரு காசநோயாளியை தத்தெடுங்கள்’-மோடி பிறந்தநாளில் நல்லெண்ண நிகழ்ச்சிகள்

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு “வருடத்திற்கு ஒரு காசநோயாளியை தத்தெடுப்பது” முதலிய பல நல்லெண்ண நிகழ்ச்சிகளை மேற்கொள்ளவிருக்கிறது பாஜக கட்சி நிர்வாகம்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை பாஜக பல்வேறு நிகழ்ச்சிகளை வெகுவிமர்சையாக நடத்த திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடி 2025ற்குள் காசநோயை ஒழிக்கும் முயற்சியை தொடங்கியிருக்கும் நிலையில், ஒரு வருடத்திற்கு ஒரு காசநோயாளியை தத்தெடுக்குமாறு கட்சி தலைவர்களைக் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மண்டலத்திலும் பயனாளிகள் பிரதமருக்கு ‘சுபகம்னா பத்ரா’ (நல்வாழ்த்துக்கள் கடிதம்) அனுப்புவதை உறுதிசெய்யுமாறு பாஜக அதன் தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
image
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் செப்டம்பர் 17 அன்று கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் பாஜக நிர்வாகம் கட்சி மாநிலங்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளது. அந்த வழிகாட்டுதலின் பேரில் கட்சி தலைவர்கள் நிகழ்வுகளில் பங்கேற்கவும், நாடு முழுவதும் கொண்டாடப்படுவதை உறுதி செய்வதற்காக அவற்றை சமூக வலைதளங்களுடன் NaMo செயலியில் பதிவேற்றவும் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் “பிரதமர் மோடியின் ஆளுமை மற்றும் பணிகள் குறித்து மாநில மற்றும் மாவட்ட அளவில் கண்காட்சியை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சி நேர்மறையான செயல்களைச் செய்ய மக்களைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ” வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.
image
நடக்கவிருக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கான வழிகாட்டுதல்கள்,

* காசநோயாளியை ஓராண்டுக்கு தத்தெடுத்து, முறையான சிகிச்சை, வாழ்வாதாரம் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஒவ்வொரு வார்டிலும் மக்கள் இயக்கத்தைத் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* “2025 ஆம் ஆண்டுக்குள் காசநோயை நாட்டிலிருந்து ஒழிக்க பிரதமர் உறுதிமொழி எடுத்துள்ளார்” அதன்படி ஒரு வருடத்திற்கு ஒரு காசநோயாளியை தத்தெடுக்குமாறு கட்சி தலைவர்களைக் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
* நாட்டில் ஏற்பட்ட கொரோனா நோய்தொற்றை தடுத்து நிறுத்தும் முயற்சி திட்டங்கள் வெற்றியடைந்துள்ள நிலையில், ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் முகாம்களை அமைத்து மக்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
* ‘வேற்றுமையில் ஒற்றுமை’ மற்றும் ‘ஏக் பாரத், ஸ்ரேஸ்தா பாரத்’ ஆகியவற்றைக் கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* “அலுவலகப் பணியாளர்கள் ஒரு நாளுக்கு மற்றொரு மாநிலத்தின் வழக்கம், மரபுகள் மற்றும் உணவுப் பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும் “ என்ற வேண்டுகோளும் வைக்கப்பட்டுள்ளது.
* ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள பயனாளிகள் சுபகம்னா பத்ராவை ( நல்வாழ்த்துகள் கடிதத்தை) பிரதமருக்கு அனுப்ப வேண்டும் என்று கட்சி பூத் அளவிலான தலைவர்களுக்கு கேட்டுக் கொண்டுள்ளது.
* பிரதமர் மோடியின் பணி கலாச்சாரம் மற்றும் சமூக நல நடவடிக்கைகள் குறித்து எழுதப்பட்ட ஏராளமான புத்தகங்களின் கண்காட்சியை ஏற்பாடு செய்யுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.
* ஒவ்வொரு மாவட்டத்திலும் ரத்த தான முகாம் நடத்தி, ரத்த தானம் செய்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சிறப்பாக செயல்பட்ட 10 தலைவர்களுக்கு விருது வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சுகாதார பரிசோதனை முகாம் நடத்த வேண்டும், செயற்கை உறுப்புகள் விநியோகம் செய்யப்பட வேண்டும் மற்றும் ஒவ்வொரு சாவடியிலும் மரம் வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
image
மேலும் அந்த வீடியோவை சமூக ஊடகங்கள், வலைதளங்கள் மற்றும் NaMo செயலியில் பதிவேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.