வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைத்து இலங்கையர்களும் மலேரியா நோய்க்கான தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்துமாறும், செல்லும்போது அந்த மருந்துகளில் குறிப்பிட்ட அளவை தம்முடன் எடுத்துச் செல்லுமாறும் தேசிய மலேரியா ஒழிப்பு தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆபிரிக்கா, இந்தியா, தாய்லாந்து, சூடான் உள்ளிட்ட பல நாடுகளில் மலேரியா நோய் பதிவாகியுள்ளமை தொடர்பில் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் இலங்கையர்கள் அது குறித்து மிக அவதானம் செலுத்த வேண்டும் என்று தேசிய மலேரியா ஒழிப்பு தலைமையகத்தின் சமூக வைத்திய பிரிவின் சிரேஷ்ட பதிவாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
மலேரியாவை பரப்பும் ஒட்டுண்ணி உடலில் நுழையும் போது, நுளம்பு அந்த நோயைப் பரப்புகின்றது என்றார்.
2016 ஆம் ஆண்டளவில் மலேரியா நோய் நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டது. இந்த ஆண்டு இருபத்தி ஏழு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 1963 ஆம் ஆண்டு 12 நோயாளர்கள்; பதிவாகியிருந்தன. 1965-67 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளர்கள் பதிவாகிய போதிலும், இலங்கை மலேரியாவிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்ட நாடாக காணப்பட்டதாக வைத்தியர் சொய்சா தெரிவித்தார்.