செய்யாறில் அதிகாலையில் மூடுபனியால் முகப்பு விளக்குகள் எரிந்தபடி பயணித்த வாகன ஓட்டிகள்

செய்யாறு : செய்யாறில் அதிகாலையில் மூடு பனியால் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகள் எரிந்தபடி பயணித்தனர்.தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. செய்யாறு மற்றும் வெம்பாக்கம் தாலுகா பகுதிகளில் கடந்த 3 தினங்களாக இடி மின்னலுடன் மழை பெய்தது.

இந்நிலையில் நேற்று செய்யாறு பகுதியில் காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரையில் கடுமையான மூடுபனி காணப்பட்டது. இதனால் அதிகமான குளிர் எடுத்தது. ஊட்டி, கொடைக்கானல் போல் சாரல் மழை பெய்ததுபோல் இருந்தது. கடும் மூடுபனியால் குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் இருந்த எதுவும் தெரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர். திடீரென நேற்றைய மூடு பனிப்பொழிவினால் நடை பயிற்சியில் ஈடுபடுபவர்கள் சிரமப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.