தைவான்-க்கு ஆயுதம் விற்பனை செய்யும் அமெரிக்கா.. கடுப்பான சீனா..?

ரஷ்யா – உக்ரைன் போரில் அமெரிக்கா உக்ரைன் நாட்டிற்கு ஆரம்பம் முதல் ஆதரவாக இருப்பது போல் தற்போது சீனா – தைவான் மத்தியிலான பிரச்சனையில் அமெரிக்கா தைவான் பக்கம் நிற்கிறது.

இதற்கிடையில் ஜோ பைடன் நிர்வாகம் வெள்ளிக்கிழமை தைவான் நாட்டிற்குச் சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்துள்ளது.

தைவான் தொடர்பாக ஏற்கனவே அமெரிக்கா – சீனா மத்தியிலான பதற்றமான சூழ்நிலை அதிகரித்திருக்கும் வேளையில், இந்த ஆயுதம் வழங்கும் ஒப்பந்தம் மூலம் இந்த நிலையை மேலும் மோசமாக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.

அனில் அகர்வாலை சந்தித்த பெண் விமானி.. சந்திப்பின் பின்னணியில் ஒரு ஆச்சரியம்!

அதிபர் ஜோ பைடன்

அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள 1.09 பில்லியன் டாலர் ஆயுத ஒப்பந்தத்தில் 355 மில்லியன் டாலர் மதிப்பிலான ஹார்பூன் air-to-sea ஏவுகணை, 85 மில்லியன் டாலர் மதிப்பிலான சைடுவைன்டர் air-to-air ஏவுகணைகளை வழங்க உள்ளது.

1 பில்லியன் டாலர் ஆயுத ஒப்பந்தம்

1 பில்லியன் டாலர் ஆயுத ஒப்பந்தம்

இந்த 1 பில்லியன் டாலர் ஆயுத ஒப்பந்தத்தில் மிகப்பெரிய பகுதி என்றால் அது தைவானின் கண்காணிப்பு ரேடார் திட்டத்திற்கான $655 மில்லியன் தளவாட ஆதரவு தொகுப்பு ஆகும், இது வான் பாதுகாப்பு எச்சரிக்கைகளை வழங்குகிறது. தைவான் எல்லை அருகே சீனா ராணுவ பயிற்சிகளைப் பெரிய அளவில் முடுக்கிவிட்டதால், முன் எச்சரிக்கை வான் பாதுகாப்பு அமைப்புகள் மிகவும் முக்கியமானதாக உள்ளது.

பேச்சுவார்த்தை
 

பேச்சுவார்த்தை

இதேவேளையில் அமெரிக்க அரசு, சீன அரசுக்கு தைவான் மீதான இராணுவ, பொருளாதார அழுத்தத்தைக் கொடுக்க வேண்டாம் என்றும் பேச்சுவார்த்தையில் பிரச்சனைகளைத் தீர்க்கவும் முடிவு செய்துகொள்ளக் கேட்டுக்கொண்டு உள்ளது.

சீனா - தைவான்

சீனா – தைவான்

ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான போர் எந்த அளவிற்கு உலக நாடுகளைப் பாதித்துள்ளது என்பது உலக நாடுகளுக்குத் தெரியும், அந்த வகையில் தற்போது சீனா – தைவான் மத்தியிலான பிரச்சனை தொடர்ந்து பெரியதாகி வருகிறது. இதனால் எப்போது சீனா தைவான்-ஐ தாக்கும் என்ன அச்சம் உலகில் அனைத்து நாடுகளுக்கும் உள்ளது.

மேற்கத்திய நாடுகள்

மேற்கத்திய நாடுகள்

உக்ரைன் நாட்டிற்கு எப்படி மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளிக்கிறதோ, அதேபோல் தைவான் நாட்டிற்கு அமெரிக்கா உட்படப் பல மேற்கத்திய நாடுகள் நேரடியாக ஆதரவு அளித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் சீனா தைவான் நாட்டைத் தாக்கினால், உலகின் உற்பத்தி இன்ஜின் ஆக விளங்கும் சீனா மீது பொருளாதாரம், வர்த்தகத் தடைகள் விதிக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

பொருளாதாரம்

பொருளாதாரம்

இது உலக நாடுகளின் பொருளாதாரத்தைப் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் சொல்லப்போனால் சீன உற்பத்தி பொருட்களை அதிகம் நம்பியிருக்கும் பல நாடுகள் தற்போது பெரிய அளவிலான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

USA Joe biden announced $1 billion arms sale to Taiwan; China – US tensions raised

USA Joe biden announced $1 billion arms sale to Taiwan; China – US tensions raised தைவான்-க்கு ஆயுதம் விற்பனை செய்யும் அமெரிக்கா.. கடுப்பான சீனா..?

Story first published: Saturday, September 3, 2022, 13:39 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.