சென்னையில்
சாலையோரம்
பிளாஸ்டிக்
பையால்
சுற்றப்பட்டு
கிடந்த
ஆண்
பிணம்
பற்றி
போலீஸார்
விசாரணை
நடத்தினர்.
பிளாஸ்டிக்
பையில்
சுற்றப்பட்டு
கிடந்தது
சினிமா
தயாரிப்பாளர்
உடல்
என்பதும்
அவரை
கொலை
செய்தவர்கள்
சின்மயா
நகரில்
சாலையோரம்
வீசிச்
சென்றதும்
தெரிய
வந்துள்ளது.
சினிமாத்துறையைச்
சார்ந்த
தயாரிப்பாளர்
கொலை
செய்யப்பட்டது
திரைத்துறையினர்
இடையே
அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில்
கொலை
செய்யப்பட்டு
சாலையோரம்
வீசப்பட்ட
தயாரிப்பாளர்
உடல்
சென்னை
மதுரவாயல்
அடுத்த
சின்மயா
நகர்
சாலையோரம்
ஆற்றுப்பாலம்
அருகே
பிளாஸ்டி
கவரால்
சுற்றப்பட்டு
கிடந்த
சடலத்தைப்
பார்த்த
பொதுமக்கள்
போலீஸாருக்கு
தகவல்
கொடுத்தனர்.
அங்கு
வந்த
போலீஸார்
பிளாஸ்டிக்
கவரை
அகற்றி
பார்த்தபோது
கைகால்கள்
கட்டப்பட்ட
நிலையில்
ரத்த
வெள்ளத்தில்
60
வயது
மதிக்கத்தக்க
ஆண்பிணம்
இருந்தது
தெரிய
வந்தது.
ஆதம்பாக்கத்திலிருந்து
காரில்
சென்றவர்
சின்மயா
நகரில்
பிணமாக
மீட்பு
இதுபற்றி
போலீஸார்
விசாரணை
நடத்தினர்,
அப்போது
ஆதம்பாக்கத்தில்
தனது
தந்தையை
நேற்று
மாலைமுதல்
காணவில்லை
என
அவரது
மகன்
புகார்
அளித்திருந்தது
தெரிந்து
அவரை
அழைத்து
வந்து
அடையாளம்
காட்டச்சொன்னபோது
சடலம்
அவரது
தந்தையுடையது
என
தெரியவந்தது.
கொலை
செய்யப்பட்டு
கிடந்தது
ஆதம்பாக்கத்தைச்
சேர்ந்த
பாஸ்கரன்
என
உறுதியாகியுள்ளது.
நேற்று
மாலை
ஆதம்பாக்கம்
ராமகிருஷ்ணா
3வதுதெரு
வீட்டிலிருந்து
காரில்
சென்ற
பாஸ்கரன்
அதன்
பின்னர்
வீடு
திரும்பவில்லை.
உடலில்
காயம்
இல்லை
ஆனால்
மரணம்
சம்பவ
இடத்திற்கு
தடய
அறிவியல்
துறையினர்
அழைக்கப்பட்டு
புலன்விசாரணை
தொடங்கப்பட்டது.
புலன்விசாரணையில்
பாஸ்கரன்
பில்டிங்
காண்ட்ராக்டர்
என்பதும்.
இவருக்கு
2
மகன்கள்
இருப்பதாகவும்
ஒருவர்
ஐடி
துறையில்
அயர்லாந்து
நாட்டில்
இருப்பதாகவும்
மற்றொரு
மகன்
இறந்துபோன
நபருடன்
தொழில்
செய்து
வருவதாகவும்
இவர்
உபயோகப்படுத்தும்
வேல்ஸ்வேகன்
கார்
சம்பவ
இடத்தில்
இருந்து
2
கி.மீ
தூரத்தில்
நிறுத்தப்பட்டுள்ளதும்
தெரியவருகிறது.என்ற
விபரம்
பணிந்து
அனுப்பபடுகிறது.
சினிமா
தயாரிப்பாளர்
பாஸ்கரன்
கொலை
செய்யபட்ட
பாஸ்கரன்,
ஆரம்பத்தில்
கட்டுமான
நிறுவனம்
நடத்தி
வந்துள்ளார்,
பின்னர்
சினிமா
ஃபைனான்சியராகி
படங்களுக்கு
ஃபைனான்ஸ்
செய்து
வந்துள்ளார்.
லக்ஷ்மி
கரண்
எண்டர்பிரைசஸ்
என்கிற
பட
நிறுவனத்தை
தொடங்கி
1997
ஆம்
ஆண்டு
முதல்
படங்களை
தயாரித்துள்ளார்.
ராம்கி
நடித்த
சாம்ராட்(1997),
மற்றும்
ஒயிட்
ஆகிய
இரண்டு
திரைப்படங்களை
தயாரித்துள்ளார்.
அதன்
பின்னர்
சினிமா
தயாரிப்பு
வேலைகளில்
ஈடுபடவில்லை
என
தெரிகிறது.
மாலையில்
எங்கு
சென்றார்,
பணம்
எடுக்கப்பட்டது
எப்படி
கொலை
செய்யப்பட்ட
பாஸ்கரன்
நேற்று
மாலை
எங்குச்
சென்றார்,
அவர்
கடத்தப்பட்டாரா?
அவருடன்
யாராவது
பேசினார்களா?
அவரது
உடல்
கொலை
செய்யப்பட்டவுடன்
சின்மயா
நகரில்
வீசப்பட்டது
ஏன்?
நேற்று
பாஸ்கரன்
வங்கிக்கணக்கிலிருந்து
ஏடிஎம்
கார்டு
மூலம்
லட்சக்கணக்கில்
பணம்
எடுக்கப்பட்டதாக
தகவல்
வெளியாகியுள்ளது,
ஒருவேளை
பணத்துக்காக
பாஸ்கரனை
மடக்கி
பணம்
பறித்தப்பின்
கும்பல்
கொலை
செய்ததா
என
பல்வேறு
கோணத்தில்
போலீஸார்
விசாரணை
நடத்தி
வருகின்றனர்.
கொலை
செய்தது
எத்தனை
பேர்..சிசிடிவி
காட்சிகள்
கொலை
செய்தது
உடலை
வீசிச்
சென்றது
இரண்டுக்கும்
மேற்பட்ட
நபர்களாக
இருக்கலாம்,
அவர்கள்
வந்த
வாகனம்
உள்ளிட்ட
விவரங்களை
அருகிலுள்ள
சிசிடிவி
காட்சிகளை
சேகரித்து
கண்டுபிடிக்கும்
முயற்சியில்
போலீஸார்
இறங்கியுள்ளனர்.
தற்போது
பாஸ்கர்
உடல்
மட்டுமே
கிடைத்துள்ள
நிலையில்
அவரது
செல்போன்
உள்ளிட்ட
மற்ற
ஆதாரங்களையும்
தேடும்
முயற்சியில்
போலீஸார்
இறங்கியுள்ளனர்.
சென்னையின்
பிரதான
இடத்தில்
சினிமா
தயாரிப்பாளர்
கொல்லப்பட்டு
உடல்
சாலையோரம்
வீசப்பட்டது
திரைத்துறையினர்
இடையே
அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.