இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசியவளி மண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது.
2022 செப்டம்பர்03ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2022 செப்டம்பர்03ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் (மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்) இன்று (03ஆம்திகதி) பிற்பகலிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமைசற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவமற்றும்வடமேல்மாகாணங்களிலும்யாழ்ப்பாணம், கண்டி, நுவரெலியா, காலிமற்றும்மாத்தறை மாவட்டங்களிலும்அவ்வப்போது மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பலதடவைகள்மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவாமாகாணத்திலும் மட்டக்களப்புமற்றும்அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில்மாலையில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
மத்தியமலைநாட்டின்மேற்கு சரிவுப்பகுதிகளில்அவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையானவேகத்தில் பலத்தகாற்றுவீசக்கூடும்என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று (03ஆம் திகதி) காக்கபள்ளி (புத்தளம் மாவட்டம்), ஹபரவெவ (குருநாகல் மாவட்டம்), கிரிமெட்டியாவ (மாத்தளை மாவட்டம்), ஹபராவ (பதுளை மாவட்டம்), மற்றும் திவுலான (மட்டக்களப்புமாவட்டம்) ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.10 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.