சென்னை : எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி உலகம் முழுவதும் வசூலை வாரிக்குவித்த பாகுபலி படத்தின் காட்சிகள் எந்தெந்த ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாகுபலி திரைப்படம் உலகம் முழுவதையும் திரும்பி பார்க்கவைத்த ஓர் படம். அசத்தலான திரைக்கதை, பிரம்மாண்ட காட்சி அமைப்பு என ஒவ்வொரு காட்சியிலும் விழிகளை விரியவைத்து, அடுத்து என்ன.. அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.
2015ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில், பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா,ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், ராணா டகுபதி, நாசர ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர்.
ஜெய் மகிழ்மதி
“ஜெய் மகிழ்மதி” என்ற கர்ஜனைக்குரலுடன் வெளியானத் திரைப்படம் பாகுபலி. இத்திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகளாகி விட்டாலும், இன்றும் இந்த வார்த்தையை கேட்கும் போது உடல் சிலிர்க்கிறது. ஆர்ப்பறித்துக்கொட்டும் அருவிக்கு நடுவே குழந்தையை ஏந்திய கை… இப்படி ஒரு தொடக்கத்தை இதற்கு முன் எந்த படத்திலும் நாம் பார்த்ததில்லை என்பதால், மனதிற்குள் ஒரு பூரிப்பு ஏற்பட்டது.
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?
ராஜமாதா கேரக்டரில் ரம்யா கிருஷ்ணனின் மிரட்டலான நடிப்பு இன்னும் கண்ணைவிட்டு அகலவில்லை. ‘கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?’ என்ற ஒற்றை கேள்வியே அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. பத்திரிக்கைகள், ஊடகங்கள், சோஷியல் மீடியாக்கள் என எங்கு பார்த்தாலும் ‘கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?’ என்று பட்டிமன்றம் வைத்து விவாதமே நடந்தது எனலாம்.
பல கோடி வசூல்
பல்வாள்தேவனாக வந்த ராணா டகுபதியின் வில்லத்தனம், நாசரின் ராஜதந்திர சூழ்ச்சி, கட்டப்பாவின் அசத்தலான நடிப்பு, சிவோ கதாபாத்திரத்தில் வந்த பிரபாஸ், பின்னணி இசை என படத்திற்கு அனைத்துமே பிளஸ்சாக அமைந்தது. கிட்டத்தட்ட ரூ 200 கோடி ரூபாய் செலவில் தயாரான இத்திரைப்படம் ரூ 600 கோடியை வசூலித்தது.
|
பாகுபலி 2 மகத்தான வெற்றி
முதல் பாகத்திற்கு கிடைத்த மகத்தான வரவேற்பால், 2017ம் ஆண்டு பாகுபலி 2 வெளியானது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மூன்று மடங்கு வசூலை வாரி குவித்தது. முதல் பாகத்திற்கு கிடைத்த பெயரும் புகழும் தான் இரண்டாம் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற காரணமாக அமைந்தது. ரூ.1000 கோடிக்கு மேல் வசூலைக் கடந்த முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற பெயரை பெற்றது. தென்னிந்திய திரைப்படங்களின் மீதான பார்வையை இத்திரைப்படம் மாற்றியது எனலாம்.
தெலுங்கு அட்லீயா நீ
பாகுபலி படத்தில் நாம் ரசித்து ரசித்து பார்த்த காட்சியை ஹாலிவுட் படத்தில் பார்த்த ரசிகர்கள் என்னது எல்லாமே காப்பியா என்றும், ராஜமௌலி.. என்னய்யா இப்படி மானத்தை வாங்கிட்டீங்களே? என்றும் ராஜமௌலி தெலுங்கு அட்லீயா நீ என நெட்டிசன்ஸ் அவரை ட்ரோல் செய்து கிண்டலடித்து வருகின்றனர்.