பேடிஎம், ரேசர்பே நிறுவனங்களில் அமலாக்கத்துறை ரெய்டு| Dinamalar

புதுடில்லி: சீனர்களால் நடத்தப்படும் , மொபைல்போன் மூலம் சட்ட விரோதமாக கடன் வழங்கும் செயலிகள் குறித்த வழக்கு தொடர்பாக ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செயலியான ரேசர்பே, பேடிஎம் மற்றும் கேஷ்ப்ரீ நிறுவனங்களில் ரெய்டு நடத்தப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 6 இடங்களில் நேற்று (செப்.,2) துவங்கிய இந்த ரெய்டு தொடர்ந்து நடந்து வருவதாக தெரிவித்துள்ளது. சீனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.17 கோடி முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி இந்தியர்களை போலி இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.