சர்வதேச பொருளாதாரத்தில் 2008 நிதி நெருக்கடிக்குப் பின்பு கொரோனா தான் பெரும் பாதிப்பாகப் பார்க்கப்பட்ட நிலையில் கொரோனாவுக்குப் பின்பு ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் வாயிலாகச் சர்வதேச பொருளாதாரத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது, குறிப்பாக வல்லரசு நாடுகள் எனக் கருதப்படும் டாப் 10 நாடுகள் மத்தியில் பெரிய அளவிலான மாற்றங்களும் சரிவுகளும் பதிவாகியுள்ளது. இதற்கிடையில் ரஷ்யா உடன் நட்பு நாடாக இருக்கும் இந்தியா உட்படப் பல நாடுகள் வளர்ச்சிப் பாதையில் உள்ளது.
இதனால் உலகின் டாப் 10 பொருளாதார நாடுகள் பட்டியலில் 5வது இடத்தில் இருந்த பிரிட்டன் தற்போது 6வது இடத்திற்குத் தள்ளப்பட்டு, அந்த இடத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது.
கிரெடிட் கார்டு வாழ்க்கையை வளமாக்குமா..? நாசமாக்குமா..?
பிரிட்டன்
பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் மோசமான நிலையில் இருக்கும் வேளையில் அந்நாட்டு அரசில் அதிகளவிலான அமைச்சர்கள் பதவி விலகியது மட்டும் அல்லாமல் தற்போது புதிய பிரதமர் யார் என்ற போட்டியில் பிரிட்டன் இந்தியரான ரிஷி சுனக் பின்னுக்குத் தள்ளி Liz Truss முன்னிலை வகிக்கிறார்.
பிரிட்டன் 6வது இடம்
இதற்கிடையில் பிரிட்டன் நாட்டின் பணவீக்கம் அதிகரித்து விலைவாசி தாறுமாறாக உயர்ந்து அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதால் 5வது இடத்தில் இருந்த பிரிட்டன் தற்போது 6வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது.
இந்தியா
இந்நிலையில் தற்போது ஐஎம்எப் வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில் இந்தியா முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் ரஷ்யாவின் தள்ளுபடி விலை கச்சா எண்ணெய் மூலம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் உள்ளது. இதன் எதிரொலியாக இந்தியா 5வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
6 இடங்கள்
ஐஎம்எப் இந்த ஜிடிபி தரவுகளை டாலர் மதிப்பீட்டில் கணித்துள்ளது, இதன் படி அமெரிக்கா முதல் இடத்தையும், சீனா 2வது இடத்தையும் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஜப்பான், ஜெர்மனி, இந்தியா, பிரிட்டன் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.
விரைவில் ஜெர்மனி இடத்தையும் இந்தியா பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
India beats UK to become world’s fifth biggest economy according to IMF Data
India beats UK to become world’s fifth biggest economy according to IMF Data | உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்த இந்தியா.. பிரிட்டன் பின்னுக்குத் தள்ளப்பட்டது..!