மரத்துப் போயிற்றா மனிதம்? நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ!

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஏ.ஆர்.நகர் பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சாலையோரத்தில் இருந்த மிகப்பெரிய மரம் ஒன்று ஜேசிபி இயந்திரம் மூலம் திடீரென சாய்க்கப்பட்டது.

அப்போது மரத்தில் இருந்த நூற்றுக்கணக்கான பறவைகள் அதிர்ச்சியில் பறந்தோடின. ஆனாலும், அந்த மரத்தின் கிளைகளின் கூடுகளில் வசித்த குஞ்சு பறவைகள் பறக்க முடியாமல் கொத்து கொத்தாக சாலையில் விழுந்து உயிரிழந்தது. கூடுகளில் இருந்த முட்டைகள் சாலையில் விழுந்து உடைந்தன. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டது.

வன உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான பறவைகள் வாழும் மரத்தை உரிய பாதுகாப்பின்றி அகற்ற வனத்துறை எப்படி அனுமதி வழங்கியது என்ற கேள்வி எழுந்தது.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் வனத்துறையின் ஒப்புதலின்றி அவசரகதியில் மரத்தை அகற்றியது தெரியவந்துள்ளது.இதனால் மரத்தை அகற்றிய ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, ஜேசிபி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டு அதன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.