LOTR: என்ன சொல்றீங்க 5000 கோடி பட்ஜெட்டா.. ரிங்ஸ் ஆஃப் பவர் வெளியான 2 எபிசோடுகள் எப்படி இருக்கு?

லாஸ்
ஏஞ்சல்ஸ்:
ஹாலிவுட்
படங்களுக்கே
டஃப்
கொடுக்கும்
வகையில்
லார்ட்
ஆஃப்
தி
ரிங்ஸ்:
ரிங்ஸ்
ஆஃப்
பவர்
வெப்சீரிஸ்
அமேசான்
பிரைமில்
தற்போது
வெளியாகி
உள்ளது.

தமிழ்
உள்ளிட்ட
பல்வேறு
உலக
மொழிகளில்
இந்த
வெப்சீரில்
உலகம்
முழுவதும்
ரசிகர்களை
ஈர்த்துள்ளது.

காட்சிக்கு
காட்சி
பிரம்மாண்ட
படைப்பாக
உருவாகி
உள்ள
இதன்
பட்ஜெட்டை
கேட்டால்
தலையே
சுற்றி
விடும்
போல
உள்ளது.

5000
கோடி
பட்ஜெட்

ஹாலிவுட்
படங்களையே
தூக்கி
சாப்பிடும்
அளவுக்கு
5000
கோடி
பட்ஜெட்டில்
அதுவும்
ஓடிடிக்காக
ஒரு
பிரம்மாண்ட
வெப்சீரிஸ்
உருவாகி
உள்ளது
கற்பனையிலும்
நினைத்து
பார்க்க
முடியாத
ஆச்சர்யம்
என்று
தான்
சொல்ல
வேண்டும்.
715
மில்லியன்
டாலர்
செலவில்
இதுவரை
எந்த
ஓடிடி
பிராஜெக்ட்டும்
எடுக்கப்படாத
அளவுக்கு
பிரம்மாண்டமாக
இதனை
உருவாக்கி
உள்ளனர்.
இதற்கு
முன்னதாக
நெட்பிளிக்ஸின்
ஸ்ட்ரேஞ்சர்
திங்ஸ்
வெப்சீரிஸ்
தான்
270
மில்லியன்
டாலர்
பொருட்செலவில்
எடுக்கப்பட்ட
பிரம்மாண்ட
வெப்சீரிஸ்
என்கின்றனர்.

ரிங்ஸ் ஆஃப் ஃபயர்

ரிங்ஸ்
ஆஃப்
ஃபயர்

லார்ட்
ஆஃப்
தி
ரிங்ஸ்
வரிசை
படங்கள்
உலகளவில்
ரசிகர்களை
கொண்டது.
ஃபேண்டஸி
படங்களான
அந்த
படங்கள்
ஆஸ்கர்
விருதுகளையும்
குவித்துள்ளன.
இந்நிலையில்,
லார்ட்
ஆஃப்
தி
ரிங்ஸ்
கதையின்
ப்ரீக்வலாக
ரிங்ஸ்
ஆஃப்
ஃபயர்
வெப்சிரீச்
உருவாகி
உள்ளது.
அமேசான்
பிரைமில்
தற்போது
முதல்
2
பாகங்கள்
தமிழ்
உள்ளிட்ட
பல்வேறு
மொழிகளில்
வெளியாகி
உள்ளன.

என்ன கதை

என்ன
கதை

தி
கிரானிக்கல்ஸ்
ஆஃப்
ஷனாராவில்
வருவது
போல
இதிலும்
எல்வ்ஸ்,
ட்ரோல்ஸ்,
ட்வார்ஃப்ஸ்
என
ஏகப்பட்ட
இன
மக்கள்
ஒவ்வொரு
இடங்களில்
வசித்து
வருவதும்,
சவ்ரான்
எனும்
தீய
சக்தி
அவர்களின்
தூய்மையான
மரத்தை
அழிப்பதும்,
அரக்கனை
அழித்து
விட்டதாக
நினைத்து
கொண்டாட்டத்தை
ஆரம்பிக்க
மீண்டும்
அந்த
சக்தி
வெளியே
கிளம்ப
அந்த
சக்தியை
அழிக்க
போராடுவது
தான்
ரிங்ஸ்
ஆஃப்
பவர்
கதையாக
உள்ளது.

ஃபிரேமுக்கு ஃபிரேம் பிரம்மாண்டம்

ஃபிரேமுக்கு
ஃபிரேம்
பிரம்மாண்டம்

தனது
அண்ணன்
அந்த
தீய
சக்தியை
பின்
தொடர்ந்து
உயிர்
விட்ட
நிலையில்,
நாயகி
அந்த
தீய
சக்தியை
தேடிச்
செல்லும்
காட்சிகளும்,
அரசரின்
கட்டளை
ஏற்று
ஒளியுடன்
ஐக்கியமாகாமல்
தனது
கத்தியுடன்
கடலில்
குதித்து
நீச்சல்
அடித்து
ஒரு
கட்டுமரத்தின்
உதவியோடு
தப்பிப்பது.
வால்
நட்சத்திரம்
எரிந்து
வந்து
விழ
அந்த
இடத்தில்
பிரம்மாண்ட
மனிதன்
தோன்ற
அவனுக்கு
ஹார்ஃபூட்
இனத்தைச்
சேர்ந்த
குறும்புக்கார
பெண்
ஒருத்தி
உதவுவது
என
கதை
ஃபிரேமுக்கு
ஃபிரேம்
பிரம்மாண்டமாக
உள்ளது.

அடுத்த எபிசோடுக்கு வெயிட்டிங்

அடுத்த
எபிசோடுக்கு
வெயிட்டிங்

இப்படி
இரண்டு
எபிசோடுகளை
ஆரம்பித்து
விட்டு
அடுத்த
வாரம்
காக்க
வச்சிட்டீங்களே
என
#TheRingsOfPower
ஹாஷ்டேக்கில்
ரசிகர்கள்
புலம்பி
வருகின்றனர்.
டூரின்
உடன்
அந்த
இளவரசர்
பாறை
உடைத்துப்
போட்டிப்
போட்டது.
விசித்திர
கெட்ட
சக்தியிடம்
இருந்து
தாயும்
மகனும்
போராடி
அதன்
தலையை
வெட்டியது
என
ரிங்ஸ்
ஆஃப்
பவர்
இயக்குநர்
பயோனா
மெர்சல்
காட்டியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.