வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் 4 நாட்களில் 1800-க்கும் மேற்பட்ட வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
உச்சநீதிமன்றத்தின் 49வது நீதிபதியாக யு.யு.லலித் கடந்த(ஆக.,27)ம் தேதி இன்று(ஆக.,27) பதவியேற்றார். அவருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர் 1957 ம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்த அவர், 1983 ல் வழக்கறிஞராக பணியை துவக்கினார். 74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக இருக்கும் லலித் நவ.,8 ல் ஓய்வு பெற உள்ளார்.
1,800 க்கும் மேற்பட்ட வழக்குகள் முடித்து வைப்பு:
தலைமை நீதிபதியாக லலித் கடந்த வாரம் பொறுப்பேற்றதில் இருந்து முதல் நான்கு வேலை நாட்களில் 1,800 க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தலைமை நீதிபதியாக இருக்கும் 74 நாட்களில் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய இருப்பதாக வழக்கறிஞர்கள் கூட்டத்தில், தலைமை நீதிபதி யு.யு.லலித் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement