பிரசவத்தின்போது குழந்தை இறந்தாலும் 60 நாட்கள் மகப்பேறு விடுப்பு உண்டு! மத்தியஅரசு

டெல்லி: மத்திய அரசின் பெண் ஊழியர்கள், பிரசவத்தின்போது குழந்தை இறந்தாலும், குழந்தை பிறந்தபிறகு இறந்தாலும்,  60 நாட்கள் மகப்பேறு விடுப்பு உண்டு என மத்திய பணியாளர் நலன்துறை தெரிவித்து உள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசு பணிகளில் உள்ள பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் 12 மாதங்கள் பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக குழந்தை பிறந்த பிறகு, அக்குழந்தையை கவனிப்பதற்காகவே பேறுகால விடுப்பு வழங்கப்படுகிறது.

இந்j நிலையில் குழந்தை பிறந்து இறந்தாலும் தாய்மார்களுக்கு, 60 நாட்கள் பேறு கால விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதுகுறித்து மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கர்ப்பமடைந்த 28 வாரங்கள் முதல் குழந்தை பிறந்த சில நாட்களில் சிசு உயிரிழந்தால் மத்திய அரசு பெண் ஊழியர்கள் 60 நாட்கள் சிறப்பு மகப்பேறு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மத்திய பணியாளர் நலன்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிரசவத்தின்போது குழந்தை இறந்தாலும், குழந்தை பிறந்தபிறகு இறந்தாலும் தாய்மார்களின் உடல்நிலையை கருத்தில்கொண்டு அவர்களுக்கு பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என தொடர் கோரிக்கைகள் வந்தனர். இதுதொடர்பாக,   சுகாதாரம் மற்றும் குடும்ப நலஅமைச்சகத்துடன் கலந்தாலோசித்து பரிசீலிக்கப்பட்டது.

தாயின் வாழ்க்கையில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய குழந்தை பிறந்த உடனேயே இறப்பு, அல்லதுஉயிரிழந்து பிறப்பது, இறப்பு காரணமாக ஏற்படக்கூடிய உணர்ச்சி அதிர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பெண் மத்திய அரசு ஊழியருக்கு 60 நாட்கள்சிறப்பு மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

மேலும், பெண் மத்திய அரசு ஊழியர் ஏற்கெனவே மகப்பேறு விடுப்பு எடுத்திருக்கும் நிலையில் அவரின் விடுப்பு காலம் முடிவடையும் தறுவாயில் உள்ள நிலையில் அவரின் குழந்தை உயிரிழக்கும்பட்சத்தில் அதற்கான மருத்துவ சான்றிதழ்கள் கேட்டு காலம் கடத்தாமல் உடனேயே அவருக்கு 60 நாட்கள் சிறப்பு மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதில் காலக்கெடு வைக்கப்பட்ட உள்ளது. அதாவது குழந்தை 28 நாட்களுக்கு உயிரிழந்தால் மட்டுமே இந்த சிறப்பு விடுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல இந்த சலுகைகள் இரண்டு குழந்தைகளுக்கு குறைவான குழந்தைகள் பெற்றவர்களுக்கு மட்டுமே இநத சலுகை கிடைக்கும் என்றும் தெரிவித்துஉள்ளது.

அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பிரசவம் நடந்திருந்தால் மட்டுமே இந்த விதிகள் பொருந்தும். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை என்பது மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின்(CGHS) கீழ் இணைக்கப்பட்ட அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனை எனவரையறுக்கப்படுகிறது.

எம்பேனல் இல்லாத தனியார் மருத்துவமனையில் அவசரக்கால பிரசவம் நடந்தால், அவசரச் சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயம் என, DoPT உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.