நிர்மலா சீதாராமன் ஷாக்; கிழித்து தொங்க போட்ட பாஜக!

இந்தியா முழுவதும் பெரும்பாலான மாநிலங்களை பாஜக தன் வசம் வைத்துள்ளது. மத்தியிலும் பாஜக அரசு தான் இருந்து வருகிறது. இவ்வளவு புகழ், பெருமையை சம்பாதித்து வைத்திருக்கிறது.

அப்படிப்பட்ட பாஜகக்கு எதிரிகள் வேறு எங்கும் இல்லை. பாஜகவில் தான் உள்ளனர். அது யாரும் இல்லை… தமிழ்நாட்டுக்கு எச்.ராஜா, மத்தியில் சுப்பிரமணிய சாமி ஆகிய 2 பேர் தான் கட்சியிலேயே இருந்து கொண்டு கட்சியை கிழித்து தொங்கப்போடுபவர்கள்.

இவர்கள் இருவரும் எந்த நேரத்திலும் எந்த கருத்தையும் சொல்ல முடியும். அதை பற்றி பாஜக மேலிடமும் வாயை திறக்காது. அதே சமயம் இவர்கள் கூறும் கருத்துகள் சர்ச்ச்சையில் சிக்கும் பட்சத்தில், ‘இது பாஜக கருத்து அல்ல’ என, யாரிடம் இருந்தாவது ஒரு அறிக்கை வந்துவிடும்.

ஆனால் இதுபோன்ற தருணங்களில் எச்.ராஜா மீதோ அல்லது சுப்பிரமணிய சாமி மீதோ பாஜக மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்காது. அந்தளவுக்கு இவர்களுக்கு கட்சியில் சுதந்திரம் உள்ளது.

இதனை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் எச்.ராஜா, சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் அவ்வப்போது ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பாஜகவை பங்கம் செய்வதையே வழக்கமாக கொண்டு இருக்கின்றனர்.

இதன் மூலம் இவர்கள் இருவரும் தங்களை பிரபலப்படுத்திக்கொள்வதோடு, இன்னமும் ஃபீல்டில் தான் இருக்கிறோம் என்பதை மறைமுகமாக சொல்லி வருவதாகவே சமூக வலைதளவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.

இந்நிலையில் வழக்கம்போல் சுப்பிரமணியன் சுவாமி தனக்கே உரிய ஸ்டைலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கிழித்து தொங்கப்போட்டு இருப்பது பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது தெலங்கானா மாநிலம் ஜகீராபாத் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்கு உள்ள ரேஷன் கடையில் ஆய்வு செய்தார். இதில் மாவட்ட கலெக்டர் ஜிதேஷ் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது நிர்மலா சீதாராமன்‘ரேஷன் கடையில் பிரதமர் மோடி படம் ஏன் வைக்கப்படவில்லை?’ என்று ஆவேசமாக பேசினார். இதை தொடர்ந்து ‘எங்கள் கட்சி தொண்டர்கள் வந்து பிரதமர் மோடி பேனர் வைப்பார்கள்.

மாவட்ட கலெக்டராகிய நீங்கள் அந்த பேனரை கவனமுடன் பார்த்துக்கொள்ள வேண்டும். இங்கு பேனர் இல்லாவிட்டால் நான் மறுபடியும் வருவேன்’ என்று நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்துவிட்டு சென்றுள்ளார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு கடும் விமர்சனத்துக்கும் உள்ளாகி உள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி போட்டுள்ள டிவிட்டர் பதிவு பாஜக வட்டாரத்தையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அந்த டிவிட்டர் பதிவில், ‘தெலங்கானாவில் மாவட்ட கலெக்டரிடம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடந்து கொண்ட விதம் வெட்கக்கேடானது’ என அதிரடி விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இதை சற்றும் எதிர்பாராத பாஜக தலைமையோ ‘வெளியே சொன்னால் வெட்கம்..சொல்லாவிட்டால் துக்கம்’ என்ற ரேஞ்சுக்கு துடைத்துக்கொண்டு வழக்கம்போல் மவுனம் காத்து வருவதை அதே கட்சியின் தொண்டர்களே கிண்டலடித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.