இந்திய வாகன சந்தையில் மீண்டும் லாம்ப்ரெட்டா.. 2023ல் வேற லெவலில் களமிறங்க திட்டம்

2023ஆம் ஆண்டில் லாம்ப்ரெட்டா என்ற நிறுவனம் மீண்டும் இந்திய வாகன சந்தையில் நுழைய இருப்பதாகவும் 2024 ஆம் ஆண்டுகளில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

1960களில் இந்தியாவின் முக்கிய சாலைகளிலும் லாம்ப்ரெட்டா வாகனங்கள் ஓடின என்பதும், ஆயிரக்கணக்கான இந்தியர்களின் முதல் தேர்வாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..

இந்த நிலையில் புதிய அவதாரமாக லாம்ப்ரெட்டா நிறுவனம் தற்போது மீண்டும் இந்தியாவில் நுழைய உள்ளது.

பெங்களூர் பேமெண்ட் நிறுவனங்களில் அமலாக்க இயக்குனரகம் அதிரடி சோதனை..!

லாம்ப்ரெட்டா நிறுவனம்

லாம்ப்ரெட்டா நிறுவனம்

லாம்ப்ரெட்டா நிறுவனம் 2023ஆம் ஆண்டில் 200 முதல் 350 சிசி வரை திறன் கொண்ட உயர் பவர் ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்ய இருப்பதாகவும், 2024 ஆம் ஆண்டுகளில் மின்சார ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாயாஜாலம்

மாயாஜாலம்

இது குறித்து நிறுவனத்தின் உரிமையாளரும் Walter Scheffrahn என்பவர் கூறியிருப்பதாவது: இந்தியாவில் எங்கள் பிராண்ட் நல்ல நன்மதிப்பை பெற்றுள்ளது. இந்திய மக்களிடையே நாங்கள் மிகப்பெரிய உறவை கொண்டுள்ளோம். கடந்த கால மாயஜாலத்தை மீண்டும் உருவாக்க விரும்புகிறோம். எங்களின் டாப்-எண்ட் ரேஞ்சுடன் இந்தியாவில் ஸ்கூட்டர்களின் ஃபெராரியை உருவாக்குவதை நாங்கள் இலக்காக கொண்டுள்ளோம்’ என்று கூறினார்.

உள்ளூரில் உற்பத்தி
 

உள்ளூரில் உற்பத்தி

2023 ஆம் ஆண்டு இந்திய வாகன சந்தையில் நுழைய முழுமையாக கட்டமைக்கப்பட்ட யூனிட் இறக்குமதிகள் மற்றும் நாக் டவுன் கிட்களில் கவனம் செலுத்தப்படும் என்றும், 2024 முதல் காலாண்டில் இருந்து உள்ளூரில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றும், லாம்ப்ரெட்டாவின் மின்சார பதிப்பு மிலன் மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உலகளவில் 100,000 யூனிட்கள்

உலகளவில் 100,000 யூனிட்கள்

2021 ஆம் ஆண்டில், லாம்ப்ரெட்டா உலகளவில் சுமார் 100,000 யூனிட்களை விற்ற நிலையில் இந்தியாவுக்குள் நுழைந்தால் இந்நிறுவனத்தின் விற்பனை இருமடங்காக அதிகரிக்கக்கூடும் என்று Walter Scheffrahn மேலும் கூறினார்.

இந்தியாவில் ஆலை

இந்தியாவில் ஆலை

ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் தடம் பதித்துள்ள Lambretta தற்போது கிட்டத்தட்ட 70 நாடுகளில் தனது விற்பனையை அதிகரித்துள்ளது. இந்தியாவில் அமைக்கப்படும் இந்நிறுவனத்தின் ஆலை அதன் மிகப்பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5,000 பேருக்கு வேலை

5,000 பேருக்கு வேலை

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்நிறுவனத்தின் ஆலை முழுமையாக செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது என்றும், இதன் காரணமாக இந்தியாவில் 5,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று Walter Scheffrahn தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Lambretta to re-enter Indian market in 2023, to launch electric scooter in 2024

Lambretta to re-enter Indian market in 2023, to launch electric scooter | இந்திய வாகன சந்தையில் மீண்டும் லாம்ப்ரெட்டா.. 2023ல் வேற லெவலில் களமிறங்க திட்டம்

Story first published: Saturday, September 3, 2022, 18:47 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.