ரூ.200 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம்.. -வடலூரில் வள்ளலார் சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம்..! – சேகர் பாபுவின் அசத்தல் அறிவிப்பு..!

ரூ.200 கோடியில் வள்ளலார் சர்வதேச மையமும் ,வடலூரில் வள்ளலார் சன்மார்க்க ஆராய்ச்சி நிலையமும் அமைக்க திட்டமிட்டுள்ளதாகஇந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் வள்ளலார் முப்பெரும் விழா தொடர்பாக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவின் கூட்டம் அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி, வள்ளலார் 200 என்ற தலைப்பில் முப்பெரும் விழாவாக அக்டோபர் மாதம் 5-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 5-ம் தேதி வரை 52 வாரங்கள் கொண்டாடப்படவுள்ளது. வள்ளலார் பெருமையை பறைசாற்றுகின்ற வகையில், தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த குழுவோடு ஆலோசிக்கப்பட்டு 10 முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. வள்ளலாரின் இலட்சினை மற்றும் அதில் இடம் பெறக்கூடிய அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அக்டோபர் மாதம் தொடங்கும் முதல் நிகழ்ச்சியை எங்கு நடத்துவது என்பது குறித்து முதலமைச்சரிடம் தெரிவித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வள்ளலாரின் சிறப்புகளை எடுத்துக் கூறும் முதல் 10 நிகழ்ச்சிகளில், யார் யாரை வைத்து, எந்தெந்த ஊர்களில் நடத்துவது என்பது குறித்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அறிவிக்கப்படும். வள்ளலார் தர்மசாலை நிறுவப்பட்ட இடத்தில் ரூ.200 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம் ஒன்று நிறுவுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த குழு சிறப்பு குழுவாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இதற்கு கால அளவு எதுவும் நிர்ணயிக்கவில்லை.
வடலூர் வள்ளலார் சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம் ஒன்றையும் ஏற்படுத்துவதற்கான அனுமதியை முதலமைச்சரிடம் பெற உள்ளோம். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பதை விமர்சனம் ஆக்குவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. தமிழில் அர்ச்சனை என்பது இப்போது தொடங்கப்பட்ட திட்டமல்ல என்றும் கலைஞர் கொண்டு வந்த திட்டத்தை புத்துணர்வு ஊட்டும் வகையில், திருக்கோயில்களில் அன்னைத் தமிழ் வழிபாடு என விளம்பர பலகை வைக்கப்பட்டு, அதில் அரச்சகர்களின் பெயர்களும், கைபேசி எண்ணம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பூஜைக்கான கட்டணத்தில் 60 சதவீதத் தொகையை அர்ச்சகர்களுக்கே ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது” எனக் கூறினார்.
சேகர் பாபுவின் இந்த அறிவிப்பு வள்ளலார் பக்தர்களுக்கு சிறப்பு செய்தியாக அமைந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.