அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவிப்பு

மின்சார விநியோகம், எரிபொருள் விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய சேவைகள், அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ,விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இந்த சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக இன்று(03)முதல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைவாக பின்வரும் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மின்சாரம் வழங்கல் தொடர்பிலான சகல சேவைகள்

பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருட்கள் வழங்கல் அல்லது விநியோகம்

வைத்தியசாலைகள், நேர்சிங் ஹோம்கள், மருந்தகங்கள் மற்றும் அது போன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, உபசரிப்பு பாதுகாப்பு, போசாக்கூட்டல், சிகிச்சை அளித்தல் ஆகியவை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் சகல சேவைகள், வேலைகள், அல்லது தொழில் பங்களிப்பு.

வர்த்தமானி அறிவிப்பு   http://www.documents.gov.lk/files/egz/2022/9/2295-45_T.pdf

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.