காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி 48வது வார்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இருந்து கழிவுநீரை மழைநீர் கால்வாயில் விடுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதன்படி, மாநாகராட்சி கமிஷனர் கண்ணன் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து மாநகராட்சி உதவி பொறியாளர் பன்னீர்செல்வம், சுகாதார ஆய்வாளர் சீனிவாசன், கவுன்சிலர்கள் எஸ்.கே.பி. கார்த்திக் ஆகியோர் ஆய்வு செய்தபோது தனியார் திருமண மண்டப கழிவுநீர், மழைநீர் கால்வாயில் கலப்பது தெரியவந்தது.
இதையடுத்து திருமண மண்டபத்தின் கழிவுநீரை மழைநீர் கால்வாயில் கலக்கவிட்டதால் மாநகராட்சி அதிகாரிகள் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மழைநீர் கால்வாயில் கழிவுநீரை கலக்கவிடுவதற்கான பைப்லைனையும் அதிகாரிகள் துண்டித்தனர்.