திராவிட மாடலில் அபார வளர்ச்சி என்பது பொய்யா..?: கேட்கிறார் சீமான்..!

“மோசமான நிதி நிலைமையை வைத்துக்கொண்டு எதற்காக இலவசம் கொடுக்க வேண்டும்..?” என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டைக் கடந்தும், தேர்தல் வாக்குறுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத் தொகையை நிதிநிலை சரியானவுடன் வழங்குவோம் என்கிறார் முதல்வர்.

அப்படியென்றால், கலால் வரி, சொத்துவரி என்று பல மடங்கு வரிச்சுமையை மக்கள் தலையில் சுமத்தி, அதன் மூலம் அரசின் வருமானம் பெருகிவிட்டது என்று நிதியமைச்சர் கூறுவது பொய்யா..?. அல்லது, இந்தியாவிற்கே வழிகாட்டும் திராவிட மாடல் ஆட்சியில் அபார வளர்ச்சி ஏற்பட்டுவிட்டது என்று கூறுவது பொய்யா..?.

பல மடங்கு வரியை உயர்த்தியும், மது விற்பனையை இரு மடங்கு அதிகரித்தும் நிதி நிலைமை சரியாகவில்லை என்றால், அத்தனை மோசமான நிதி நிலைமையை வைத்துக்கொண்டு எதற்கு இலவசம் கொடுக்க வேண்டும்..?.

இலவசம் என்பது மறைமுகமான அடித்தட்டு மக்களின் வரிப்பணம் தானே..? அவர்களின் பணத்தை எடுத்து அவர்களுக்கே கொடுத்துவிட்டு எதற்கு இலவசம் என்று ஏமாற்ற வேண்டும்..?” என்று கூறியுள்ளார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.