மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு.. லிக்விட் ஃபண்ட்கள் என்றால் என்ன?

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் பல்வேறு வகைகள் இருக்கும் நிலையில் அதில் முக்கியமான ஒன்றாக லிக்விட் ஃபண்ட் என கூறப்படுகிறது.

லிக்விட் ஃபண்ட் என்றால் என்ன? குறைந்த கால முதலீட்டில் இந்த லிக்விட் ஃபண்ட் எந்த அளவுக்கு வருமானத்தை கொடுக்கும் என்பதை பார்ப்போம்.

ஓரே நாளில் 10000 ஸ்கூட்டர்களை விற்பனை செய்த ஓலா..!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

பொதுவாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்றாலே நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றது என்பதும், குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகள் முதலீடு செய்தால் வருடத்திற்கு 10 முதல் 12 சதவீத லாபம் கொடுக்கும் என்றும் முதலீட்டு ஆலோசகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் ஒரு சில மியூச்சுவல் ஃபண்டுகள் குறுகிய காலத்தில் முதலீட்டாளர்களுக்கு லாபம் தரும் வகையில் உள்ளது. அவற்றில் ஒன்றுதான் லிக்விட் ஃபண்ட்.

லிக்விட் ஃபண்ட்

லிக்விட் ஃபண்ட்

ஒரு குறுகிய காலகட்டத்துக்கு பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்றும், ஆனால் அதே நேரத்தில் நாம் செய்யும் முதலீட்டின் மதிப்பு குறையக் கூடாது என்றும், குறைந்த அளவிலான ரிட்டர்ன் இருந்தால் கூட பரவாயில்லை, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணும் முதலீட்டாளர்கள் லிக்விட் ஃபண்ட் என்ற முறையை தேர்வு செய்யலாம்.

பிக்சட் டெபாசிட்
 

பிக்சட் டெபாசிட்

பிக்சட் டெபாசிட்டில் பணத்தை முதலீடு செய்வது குறுகிய கால முதலீட்டாளரின் நோக்கத்தை பூர்த்தி செய்யும். ஆனால் அதில் மிகக்குறைந்த அளவில் மட்டுமே வருமானம் கிடைக்கும். ஃபிக்சட் டெபாசிட் முறையில் பணம் பாதுகாப்பு என்பது உறுதி என்றாலும், அதன் பாதகமான அம்சம் என்னவென்றால் குறுகிய காலத்தில் முதலீடு செய்தால் மிகக்குறைந்த வட்டி சதவிகிதமே கிடைக்கும்.

குறுகிய கால முதலீடு

குறுகிய கால முதலீடு

இந்தச் சூழலில் லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட் குறுகிய கால முதலீட்டுக்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இதில் சேமிப்புக் கணக்குகள் அல்லது மிகக் குறுகிய கால ஃபிக்சட் டெபாசிட்களுடன் ஒப்பிடும் போது நியாயமான நல்ல ரிட்டர்ன்கள் கிடைக்கும். மேலும் எந்த சமயத்திலும் பணத்தை திரும்ப எடுத்து கொள்ளும் வசதியும் இதில் உண்டு.

குறுகிய கால டெட் மியூச்சுவல் ஃபண்ட்

குறுகிய கால டெட் மியூச்சுவல் ஃபண்ட்

லிக்விட் ஃபண்ட் என்பது ஒரு திறந்த நிலை குறுகிய கால டெட் மியூச்சுவல் ஃபண்ட் வகையை சேர்ந்தது. இந்த வகை ஃபண்ட்கள் பொதுவாக வைப்பு சான்றிதழ்கள், வணிக ஆவணங்கள், கருவூல பில்கள், அழைப்பு பணம் போன்ற பணச்சந்தைகளில் முதலீடு செய்யப்படுகின்றன.

கட்டணங்கள் இல்லை

கட்டணங்கள் இல்லை

சந்தை அபாயங்கள் மிகவும் குறைந்த முதலீட்டுத் திட்டமான இதில் முதலீடு செய்தவர்கள் வெளியேறும்போது கட்டணங்கள் செலுத்த தேவையில்லை. மேலும் எந்த நேரத்திலும் எவ்வித அபராதமும் இன்றி முதலீடு செய்த பணத்தை எடுத்து கொண்டு முதலீட்டில் இருந்து வெளியேறலாம் என்பது இதில் உள்ள கூடுதல் வசதி ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

What is liquid fund and how it works?

What is liquid fund and how it works? | மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு.. லிக்விட் ஃபண்ட்கள் என்றால் என்ன?

Story first published: Saturday, September 3, 2022, 20:58 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.