தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டது – புதிய விலை விபரங்கள் வெளியாகின


தொலைபேசி கட்டணத்தை அதிகரிப்பதற்கு தொலைபேசி சேவை வழங்குனர்களுக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நிலையான தொலைபேசி, கையடக்க தொலைபேசி மற்றும் செய்மதி தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.

டொலரின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், செயற்பாட்டுச் செலவுகள் மேலும் அதிகரிப்பதன் காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக இலங்கையின் பிரதான தொலைபேசி சேவை வழங்குநர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, கையடக்க தொலைபேசிகள், நிலையான தொலைபேசிகள் மற்றும் இணைய வசதிகளுக்கான கட்டணங்கள் 20 வீதம் அதிகரிக்கப்படும்.

தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டது - புதிய விலை விபரங்கள் வெளியாகின | Telephone Charges Have Been Increased

முற்கொடுப்பனவு பொதிகளை  அதிகரித்தது டொபிடெல்

மேலும், தொலைபேசி நிறுவனங்கள் நடத்தும் செய்மதி மற்றும் கேபிள் தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டணம் 25 வீதம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த சேவைகளுக்கு பொருந்தும் மதிப்பு கூட்டு வரி அல்லது VAT வரி விகிதமும் வரும் திங்கட்கிழமை முதல் 3 வீதம் அதிகரிக்கப்பட்டு புதிய VAT விகிதம் 15 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.

தொலைபேசி சேவைக் கட்டணங்களின் அதிகரிப்புக்கு அமைய, இலங்கையின் பிரதான தொலைபேசி சேவை வழங்குனர்களில் ஒன்றான மொபிடெல், தனது முற்கொடுப்பனவு பொதிகளை பின்வருமாறு அதிகரித்துள்ளது.

இதன்படி, ஏற்கனவே இருந்த 100 ரூபா பொதி 120 ரூபாவாகவும், 240 ரூபா பொதி 276.28 ரூபாவாகவும், 598 ரூபா பொதி 717 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மொபிடெல்லின் போஸ்ட்பெய்ட் இணையப் பொதிகள் தற்போதுள்ள 790 ரூபா பொதி 948 ரூபாவாகவும், 990 ரூபா பொதி 1,188 ரூபாவாவும், 2,990 ரூபா பொதி 3,588 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டது - புதிய விலை விபரங்கள் வெளியாகின | Telephone Charges Have Been Increased

டயலொக் நிறுவம் மேற்கொண்டுள்ள கட்டண அதிகரிப்பு  

மேலும், இந்நாட்டின் மற்றுமொரு முக்கிய தொலைபேசி நிறுவனமான டயலொக் தனது முற்கொடுப்பனவு இணையப் பொதிகளை இவ்வாறு அதிகரித்துள்ளது. இதன்படி, 29 ரூபா பொதியின் விலை 35 ரூபாவாகவும், 49 ரூபா பொதி 59 ரூபாவாகவும், 99 ரூபா பொதி 119 ரூபாவாகவும், 199 ரூபா பொதி 239 ரூபாவாகவும் அதிகரிக்கவுள்ளது.

டயலொகின் போஸ்ட்பெய்ட் பேக்கேஜ்கள் 199 ரூபாவில் இருந்து 249 ரூபாவாகவும், 349 ரூபாவில் இருந்து 439 ரூபாகவும், 499 ரூபாவில் இருந்து 619 ரூபாகவும், 949 ரூபாவில் இருந்து 1,179 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

ஏர்டெல் நிறுவனத்தின் இணைய பேக்கேஜ்கள் அதிகரிப்பின் படி தற்போது 98 ரூபாயாக இருந்த பேக்கேஜ் 129 ரூபாயாகவும், 199 ரூபாயாக உள்ள பேக்கேஜ் 249 ரூபாயாகவும், 399 ரூபாய் பேக்கேஜ் 499 ரூபாயாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

ஏர்டெல் தனது போன் மற்றும் இணைய போஸ்ட்பெய்ட் பேக்கேஜ்களை இவ்வாறு அதிகரித்துள்ளது.

இதன்படி தற்போது 699 ரூபாவாக இருந்த போஸ்ட்பெய்ட் பேக்கேஜ் 839 ரூபாவாகவும், 900 ரூபாயாக இருந்த போஸ்ட்பெய்ட் பேக்கேஜ் 1080 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டது - புதிய விலை விபரங்கள் வெளியாகின | Telephone Charges Have Been Increased

கேபிள் தொலைக்காட்சி சேவைக் கட்டணமும் அதிகரிப்பு 

Hutch தனது போஸ்ட்பெய்ட் பேக்கேஜ்களின் விலைகளை பின்வருமாறு உயர்த்தியுள்ளது. இதன்படி, தற்போதைய 399 ரூபா பொதி 480 ரூபாவாகவும், 599 ரூபா பொதி 720 ரூபாவாகவும், 1,499 ரூபா பொதி 1,800 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனமும் தங்களுடைய கட்டணங்களை அதிகரித்துள்ளதோடு, இணையப் பொதிகளை 499ல் ரூபா பொதி 650 ரூபாவாகவும், 790 ரூபா பொதி 990 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

இது தவிர, தற்போதுள்ள 1,490 ரூபா பேக்கேஜ் 1,790 ரூபாவாகவும், 2,690க்கு கிடைக்கும் பேக்கேஜ் 3,090 ரூபாகவும் உயர்த்தப்படவுள்ளது.

தொலைபேசி நிறுவனங்களால் நடத்தப்படும் செய்மதி மற்றும் கேபிள் தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டண உயர்வின் கீழ், டயலொக் தொலைக்காட்சியின் பொதிகளுக்கான 383 ரூபா பொதி 480 ரூபாவாகவும், தற்போதுள்ள 799 ரூபா பொதி 1,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும் தற்போதுள்ள 1,799 ரூபாய் தொகுப்பு 2,250 ரூபாயாக அதிகரிக்கப்படும்.

Pio TV கட்டண அதிகரிப்பின் கீழ், 399 ரூபா பொதி 499 ரூபாவாகவும், 690 ரூபா 860 ரூபாவாகவும், 1299 ரூபா 1625 ரூபாவாகவும் அதிகரிக்கப்படும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.