சென்னை: அப்படி ஆபாசமாக நடித்த நடிகையை நம்பி எந்த தயாரிப்பாளரும் அடுத்ததாக படம் எடுக்க முன் வரவே இல்லை.
ஒட்டுமொத்தமாக திரையுலகை விட்டே ஒதுக்கப்பட்ட அந்த நடிகை தன்னைத் தானே செதுக்கிக் கொள்ள கையில் இருந்த காசையும் சில ஃபைனான்ஸியர்களிடம் கடனாக வாங்கிய காசையும் வைத்து எடுத்த படம் நல்லவேளை தப்பித்து விட்டது.
இந்நிலையில், பாவம்ப்பா அந்த நடிகை அவரை ஏன் ஒதுக்கணும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் இன்னமும் கிரேஸ் இருக்கே என நினைத்து அந்த நடிகையை புக் செய்யலாம் என நினைத்த த்யாரிப்பாளரும் பின் வாங்கி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.
எல்லைமீறிய நடிப்பு
கோலிவுட்டில் தயாரிப்பாளர்கள் ஒரு நடிகைரையோ நடிகையோ புக் செய்வதற்கு முன்பாக குடும்ப ரசிகர்களுக்கு அவர்கள் செட் ஆவார்களா? அந்த நடிகர்களின் படங்களை பார்க்க பெண்கள் கூட்டம் வருமா? என்பதை ரொம்பவே கவனத்துடன் கையாள்வார்கள். ஆனால், போல்டாக நடிக்கிறேன் என்கிற பெயரில் ஒரு சில நடிகைகள் எல்லை மீறிய நடிப்பை வெளிப்படுத்தும் போது பெண்கள் மத்தியிலும் குடும்பங்கள் மத்தியிலும் அந்த நடிகைகளுக்கான மார்க்கெட் குறைந்து விடும்.
ஃபீல்ட் அவுட்
அதே போன்ற ஒரு நிலைமை தான் அந்த போல்டான நடிகைக்கு சமீபத்தில் நடந்தது. ஒட்டுமொத்த சினிமா துறையும் அந்த நடிகையுடன் கூட சேர்ந்து டூயட் ஆடிய முன்னணி நடிகர்கள் உட்பட அனைவரும் கையை விரித்து விட்டனர். பிளாக் மார்க் வைக்கப்பட்டு கிட்டத்தட்ட ஃபீல்ட் அவுட்டே ஆகி விட்டார். சினிமாவை விட்டே விலகிவிவிட்டார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன.
ஸ்ட்ராங் கம்பேக்
ஆனால், தனக்குப் பிடித்த நடிப்புக்காகத்தான் எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் சென்று நடித்தேன் என்றும், தன்னிடம் இருக்கும் திறமையை ஏன் வீணடிக்க வேண்டும் என நினைத்த அந்த நடிகை கொஞ்சம் கூட கவர்ச்சியே காட்டாமல் குடும்ப ஆடியன்ஸை கவர ஃபுல் டிரெஸ் உடன் சொந்த தயாரிப்பில் ஒரு படத்தை நடித்து முடித்து வெளியிட்டு ஸ்ட்ராங்கான கம்பேக் கொடுத்துள்ளார்.
தயாரான தயாரிப்பாளர்
நடிகையின் நடிப்பை பார்த்து மிரண்டு போன ஒரு பிரபல தயாரிப்பாளர் இந்த நடிகையை ஏன் வேஸ்ட் பண்ணனும் என நினைத்து தனது அடுத்த படத்தில் அவர் தான் ஹீரோயின் என புக் பண்ண முழு மனதோடு தயாராகி நடிகையுடன் ஒப்பந்தம் பண்ணும் அளவுக்கே ரெடியாகி விட்டாராம்.
பிரச்சனையால் ஓட்டம்
ஆனால், சமீபத்தில் நடிகை கொடுத்த பரபரப்பு புகார் பற்றி அறிந்ததும் தயாரிப்பாளரின் குடும்பத்தினர் அவரிடம் தேவையில்லாமல் தலையை கொடுத்து மாட்டிக்காதீங்க வேண்டாம் என தடுத்து விட்டார்களாம். தயாரிப்பாளரும் அந்த நடிகையை ஒப்பந்தம் செய்யும் முடிவை கைவிட்டு விட்டதாக கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.