வியான் டிவி நிர்வாக ஆசிரியர் ராஜினாமா

புதுடெல்லி: ‘வியான்’ செய்தி சேனலின் நிர்வாக ஆசிரியர் பல்கி சர்மா உபாத்யாய் தனது பணியிலிருந்து நேற்று ராஜினாமா செய்துள்ளார்.

2016-ம் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட வியான் டிவி, சர்வதேச அளவில் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் சர்வதேச அளவில் கவனிக்கத்தக்க இந்திய ஊடகங்களில் ஒன்றாக அது வளர்ந்தது. இந்தச் சேனலின் புகழ்பெற்ற ‘கிராவிட்டாஸ்’ நிகழ்ச்சியை பல்கி சர்மா தொகுத்து வழங்கிவந்தார். ‘வியான்’ சேனலின் அடையாளமாக பல்கி சர்மா பார்க்கப்பட்டார். அந்த அளவில் அவரது நிகழ்ச்சி பரவலான கவனம் பெற்றது. இந்நிலையில் அவர் தனது பணியிலிருந்து நேற்று ராஜினாமா செய்துள்ளார்.

நேற்று மதியம் அவர் தனது குழுவினரைச் சந்தித்து தனது ராஜினாமா முடிவை அறிவித்தார். நேற்று இரவு அவர் ‘கிராவிட்டாஸ்’ நிகழ்ச்சியின் கடைசி அத்தியாத்தை வழங்கினார்.

பல்கி சர்மா ராஜஸ்தான் மாநிலத்தில் 1982-ம் ஆண்டு பிறந்தார். பத்திரிகைத் துறையின் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தூர்தர்சன் தொலைகாட்சியிலிருந்து அவரது இதழியல் பயணம் தொடங்கியது. அதன் பிறகு ஹிந்துஸ்தான் டைம்ஸ், சிஎன்என் – ஐபிஎன் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றினார். இதழியல் துறையில் 20 ஆண்டுகால அனுபவம் பெற்றவர். அவரது விலகல் வியான் நிறுவனத்துக்கு பெரும் இழப்பு என்று சக பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.