உலகின் மிகப்பெரிய பொருளாதாரம்; உலகளவில் இந்தியா 5ம் இடம் பிடித்தது: இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளியது

புதுடெல்லி: உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலக நாடுகளின் பொருளாதார சூழல் குறித்த ஆய்வறிக்கையை சர்வதேச நிதி அமைப்பான ஐஎம்எப் வெளியிட்டுள்ளது. உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி, அதன் நிகர மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக  கடந்த 2020, 2021ம்  ஆண்டுகளில்  பல நாடுகள் பெரும் பொருளாதார வீழ்ச்சியைக் கண்டுள்ளன.  இங்கிலாந்து நாட்டில் இதன் தாக்கம் மிக தீவிரமாக எதிரொலித்த நிலையில், அந்த பாதிப்பில் இருந்து இன்னும் அது மீள முடியாமல் தவிக்கிறது. இந்நாட்டில் விலைவாசி உயர்வு, மக்களை வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, ஐஎம்எப்.பின் பொருளாதார அறிக்கை முடிவு வெளியாகி இருக்கிறது. உலகின் முன்னணி பொருளாதார நாடுகளின் பட்டியலை புள்ளி விவரத்துடன் அது  வெளியிட்டுள்ளது. அதில், இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி உள்ள இந்தியா, உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார சக்திமிக்க நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.