இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூய்மை பணியாளர்கள் கோயில்களில் நேரடி நியமனம்: ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

நெல்லை: கோயில்களில் தூய்மைப் பணியாளர் காலி பணிடங்களை நேரடிய நியமனம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுளாார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மற்றும் கோயிலை சார்ந்த இடங்களை தூய்மையாக வைத்திருப்பது மிகவும் அவசியம். கோயில்களில் தூய்மைப் பணி, கோயில் பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோயில்களின் அங்கீகரிக்கப்ட்ட பணியிடப் பட்டியலில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளர் (திருவலகு/தூர்வை/தூர்ப்பு/பெருக்குபவர் போன்றவை) பணியிடங்களை  சட்ட விதிகளின்படி நேரடி நியமனம் மூலம் நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட கலெக்டரால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தினக்கூலி அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக நியமனம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியாளர்கள் சம்பள செலவு அந்தந்த கோயிலின் உச்ச வரம்பிற்குள் இருப்பதையும் உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

கோயில்களில் தூய்மை பணியாளர்கள் காலி பணியிட விவரங்களை அறிக்கையாக அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதில், கோயில் பெயர், அங்கீகரிக்கப்பட்ட பணியிடப் பட்டியலில் உள்ள மொத்த தூய்மைப் பணியிடங்களின் எண்ணிக்கை, தற்போது பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கை, காலியாக உள்ள தூய்மைப் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் காலியாக உள்ள தூய்மைப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, நேர்காணல் நடைபெற்ற பணியிடங்களின் எண்ணிக்கை, நியமனம் செய்யப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை, மாவட்ட கலெக்டரால் நிர்ணயிக்கப்பட்ட தினக்கூலி அடிப்படையில் தற்காலிக நியமனம் செய்யப்படவுள்ள தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கை ஆகிய விவரங்களை அறிக்கையில் குறிப்பிட வேண்டும். தற்காலிக நியமனங்களுக்கு அந்ெதந்த கோயில்களின் ஆணையரிடம் உரிய அனுமதி பெற்று செயல்படுத்த வேண்டும். இப்பணியை தனி கவனம் செலுத்தி கண்காணிக்க மண்டல இணை ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.