அதிமுக பொதுக்குழு மேல் முறையீட்டு தீர்ப்பால், பக்கம் இருந்த நிர்வாகிகள், அணிக்கு தாவ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரனின் தீர்ப்பை எதிர்த்து,
தரப்பில், சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்த சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்றும், இடைக்காலப் பொதுச் செயலாளராக, எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உத்தரவிட்டு, தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவை ரத்து செய்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத
தரப்பினர் திகைத்து நின்றனர். இந்தத் தீர்ப்பை எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.
இதைத் தொடர்ந்து தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், எங்கு சென்றாலும், வெற்றி தங்களுக்கு தான் என ஆரூடம் தெரிவித்தனர்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு தீர்ப்பு சாதகமான வந்துள்ளதால், ஓ.பன்னீர்செல்வம் பக்கம் ஒருசில நிர்வாகிகளும் அந்தப் பக்கம் அணி மாற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. “ஓ.பன்னீர்செல்வத்தை இனியும் நம்பினால், அதிமுகவில் இருக்கிற பொறுப்பு கூட கிடைக்காது; எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்து வகிக்கிற பதவியையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும்” என்ற மன நிலைக்கு, ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ளவர்கள் வந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, வரும் நாட்களில், அணி தாவும் படலங்கள் தொடர வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருப்பதால் இந்த முடிவுக்கு அவர்கள் வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆதரவாளர்களை தக்க வைக்க, ஓ.பன்னீர்செல்வம் என்ன யுக்திகளை பின்பற்றப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, அதிமுக பொதுக்குழு மேல் முறையீட்டு தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நாளை முறையீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.